Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் கலாச்சாராம், ஆன்மிகம் அனைத்து மக்களையும் ஈர்த்துள்ளது..! தமிழக ஆளுநர் சென்னை தின வாழ்த்து

சென்னை தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னையின் செழுமையான கலாச்சாரம், ஆன்மீகம், துடிப்பான புலமை ஆகியவற்றின் நீண்ட வரலாறு அனைத்து மக்களையும் ஈர்த்தது மட்டுமில்லாமல் ஊக்கப்படுத்தியதாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
 

Tamil Nadu Governor and political party leaders have congratulated Chennai Day
Author
Chennai, First Published Aug 22, 2022, 11:10 AM IST

சென்னைக்கு 383வது பிறந்த தினம்

சென்னை மாநகரம் உருவாகி இன்றுடன் 383 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆம், 1939 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதியை நாம் மெட்ராஸ் தினம் அல்லது சென்னை தினம் என்று கொண்டாடி வருகின்றோம். சென்னை தினத்தை  சிறப்பிக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் கடந்த இரண்டு நாளாக கோலாகலமாக விழா எடுத்து கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் சிறப்பு புகைப்பட கண்காட்சியும், உணவு திருவிழாவும் நடைபெற்றது. இதே போல சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் சிறப்பு நிகழ்ச்சியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பலரின் முகவரியாக மாறியுள்ளது இந்த மெட்ராஸ்,  பலருக்கு முகவரி வழங்கியுள்ளது இந்த மெட்ராஸ். தமிழர் பண்பாட்டின் சங்கமம், எங்கள் தமிழகத்தின் தலைநகரத்திற்கு இன்று 383வது பிறந்த தினம்!  என அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

5 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள்...! ஓபிஎஸ்- இபிஎஸ் அணி எப்படி இருந்தது தெரியுமா- மைத்ரேயன் தகவல்

Tamil Nadu Governor and political party leaders have congratulated Chennai Day

சென்னை ஆன்மிகம் - ஆளுநர் வாழ்த்து

இதே போல நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், உழைக்கும் மக்களால் வளர்த்தெடுக்கப்பட்ட தமிழகத்தின் தலைநகரம் சென்னை மாநகரம். சென்னையின் வளர்ச்சிக்கு உரமாய்த் திகழ்ந்த அனைவருக்கும் சென்னை நாள் வாழ்த்துகள் என கூறியுள்ளார். மேலும் தமிழக ஆளுநர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  ''சென்னையின் செழுமையான கலாச்சாரம், ஆன்மீகம், துடிப்பான புலமை ஆகியவற்றின் நீண்ட வரலாறு அனைத்து மக்களையும் ஈர்த்தது மற்றும் ஊக்கப்படுத்தியது'' என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். இதே போல பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் சென்னை தினத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

மதராஸ் முதல் சென்னை வரை.. நாம் தொலைத்த முக்கிய மூன்று விடயங்கள்.. சற்று திரும்பி பார்ப்போம்..

Follow Us:
Download App:
  • android
  • ios