Asianet News TamilAsianet News Tamil

25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

தமிழ்நாட்டில் உள்ள 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள் அமைக்க இருப்பதாக அரசாணை வெளியாகியுள்ளது.

Tamil Nadu Government open traditional restaurants in 25 farmers markets
Author
First Published May 10, 2023, 11:52 AM IST

தமிழகத்தில் 25 உழவர் சந்தைகளில் தனியார் பங்களிப்புடன் தொன்மை சார் உணவகங்கள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்ற மார்ச் 21ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் 2023- 24ஆம் நிதி ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தனியார் பங்களிப்புடன் 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகங்கள் உருவாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், வேளாண் பட்ஜெட்டில் அறிவித்தபடி 25 உழவர் சந்தையில் தனியார் பங்களிப்புடன் தொன்மை சார் உணவகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிறுதானிய கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகள் போன்ற சிறுதானிய உணவுப் பொருட்கள் அங்கு விற்பனை செய்யப்பட உள்ளன. இதன் மூலம் நுகர்வோரிடம் சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனுமதி முடியும் என்று அரசு திட்டமிட்டுள்ளது.

Karnataka Election 2023 LIVE Updates: கர்நாடகாவில் 11 மணி வரை 21% வாக்குப்பதிவு

முதற்கட்டமாக கோவை, திண்டுக்கல் , ஈரோடு, குமரி, கள்ளக்குறிச்சி , கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உணவகம் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது. மதுரை, நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை , ராமநாதபுரம்,சேலம், தேனி, திருப்பூர், திருச்சி, வேலூர் நெல்லை ஆகிய மாவட்டங்களில் தொன்மை சார் உணவகம் அமைக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்தத் தொன்மை சார் உணவகங்கங்கள் அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை உழவர் சந்தையில் மட்டுமே தொன்மைசார் உணவகம் செயல்படும். சிறுதானிய உணவகத்துக்கு இலக்கிய நயம் சார்ந்த பெயர் சூட்டவும் தமிழக அரசு அறிவுறுத்தப்படுகிறது.

தொன்மை சார் உணவகத்தில் பிளாஸ்டிக் பை மற்றும் டம்ளர் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்படுவதாவும் புவிசார் குறியீடு பெற்ற உணவுப் பொருட்களையே விற்க வேண்டும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவில் தொடரும் வாரிசு அரசியல்..! தந்தைக்கும், மகனுக்கும் பதவி கொடுக்கும் ஸ்டாலின்; அழுத்தம் காரணமா?

Follow Us:
Download App:
  • android
  • ios