அடித்தது ஜாக்பாட்.. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - முதல்வர் ஸ்டாலின் தகவல்!
Dearness Allowance : தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியை தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர்
இந்த நிலையில் தற்பொழுது தமிழக அரசு ஊழியர்களுக்கு அவர்களுடைய அகவிலைப்படி உயர்வில் 4 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும் என்றும், இதனால் 46% இருந்த அகவிலைப்படி தற்பொழுது 50 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அரசின் இந்த அறிவிப்பால் தமிழக அரசு ஊழியர்களும், ஓய்வூதியம் பெறுபவர்களும் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து தமிழக அரசு தற்பொழுது வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் "அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும் பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒப்பற்ற பங்கினை முழுவதுமாக உணர்ந்துள்ள இந்த அரசு அவர்களுடைய நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது".
"முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றுக்கொண்ட நாளிலிருந்து கடந்த அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி, மற்றும் கடன் சுமையை பெருந்தொற்றல் ஏற்பட்ட வருவாய் இழப்பு ஆகிவற்றிற்கு இடையேயும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது இந்த அரசு"என்று அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு ரூ.6000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள்: எல்.முருகன் தகவல்!