Asianet News TamilAsianet News Tamil

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியா..? உச்ச நீதிமன்றத்தில் அதிரடியாக மேல்முறையீடு செய்த தமிழக அரசு

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
 

Tamil Nadu government appeals in Supreme Court against RSS rally
Author
First Published Feb 21, 2023, 12:10 PM IST

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி

கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி தினத்தில் தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தது. இதற்கான அனுமதி காவலதுறை வழங்காமல் இருந்தது. இதனையடுத்து நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்த நிலையில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் நீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாடியது. இதனையடுத்து இறுதியாக 6 இடங்களைத் தவிர 44 இடங்களில் பாதுகாப்போடு உள் அரங்கு கூட்டமாக நடத்துவதற்கு உயர் நீதிமன்ற தனி நீதிபதி  அனுமதி வழங்கி உத்தரவிட்டார். 

பல்கலைக்கழகங்களை மதவெறி கூடங்களாக மாற்றிய ஆர்எஸ்எஸ்.! மனித குலத்திற்கு எதிரானவர்கள்- சீமான்

Tamil Nadu government appeals in Supreme Court against RSS rally

உள் அரங்கில் நடத்த அனுமதி

ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளை ஏற்காத ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வு முன்பு  மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள்  கொண்ட டிவிசன் அமர்வு விசாரித்து,  பொது சாலைகளில் அணிவகுப்பு நடத்துவது என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை எனவும், இதுபோன்ற அணிவகுப்புகள், கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளதே தவிர, முழுமையாகத் தடை செய்ய முடியாது என்றும் உளவுத் தகவல்கள் என்ற பெயரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி ஒரு அமைப்பின் அடிப்படை உரிமையை மாநில அரசு தடை செய்ய முடியாது என தெரிவித்தது. 

Tamil Nadu government appeals in Supreme Court against RSS rally

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்த நீதிபதிகள்

மேலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த வேண்டுமென்ற உத்தரவை ரத்து செய்தது. மேலும், மூன்று தேதிகளை குறிப்பிட்டு பேரணிக்கு அனுமதி கோரி அரசிடம் விண்ணப்பிக்கும்படி  ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வு , அந்த மூன்று தேதிகளில், ஒரு தேதியில் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கும்படியும் அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் ஒழுக்கத்தை கடைபிடித்து அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த வேண்டும் என்றும், பிறரை  தூண்டும் வகையில் பேரணி நடத்தக்கூடாது என்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000..! எப்போது வழங்கப்படும் தெரியுமா..? உதயநிதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Tamil Nadu government appeals in Supreme Court against RSS rally

மேல்முறையீடு செய்த தமிழக அரசு

இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்த சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வு உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் உள் அரங்கில் பேரணி நடத்த அனுமதி வழக்கப்பட்டதாகவும் ஆனால் அந்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம்? பாஜவை வீழ்த்த! பக்கா பிளானோடு தேசிய தலைவர்களை இணைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

Follow Us:
Download App:
  • android
  • ios