செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கடிதம் மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் தெரிவித்திருந்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று தற்பொழுது ஆளுநருக்கு பதில் கடிதம் ஒன்றை போட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். நேற்று அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் RN ரவி அறிவித்தார், இதை தொடர்ந்து தமிழக அரசியலில் ஒரு மாபெரும் புயல் எழுந்தது.

Scroll to load tweet…

குறிப்பாக முதல்வரின் ஒப்புதலை பெறாமல் ஆளுநர், அமைச்சர் ஒருவரை நீக்குவது மிகவும் அரிதான ஒன்றாக கருதப்படுகிறது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனத்தை முன் வைத்தனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளம்பிய நிலையில், செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கடிதம் மூலம் தமிழக முதல்வருக்கு ஆளுநர் தெரிவித்திருந்தார். 

இதையும் படியுங்கள் : ஆலங்குடி அருகே மின்னல் தாக்கி வீட்டு வாசலிலேயே 27 வயது பெண் உயிரிழப்பு

இந்நிலையில் அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும். இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்றும், பதில் கடிதம் ஒன்றை தற்பொழுது முதல்வர் மு.க ஸ்டாலின் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்.

மேலும் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில், என்னுடைய அமைச்சரை நீக்குவதற்கு உங்களுக்கு அதிகாரம் கிடையாது என்றும். இது முழுக்க முழுக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு உண்டான அதிகாரம் என்றும் கடுமையாக எழுதியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

இதுவரை நடந்து என்ன?

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் அப்போதைய மாநில போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் தான் செந்தில் பாலாஜி. தனது அதிகாரத்தை பயன்படுத்தி இவர் பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பெற்று ஏமாற்றியதாக வழக்கு ஒன்றும் பதியப்பட்டது. 

இந்த வழக்கின் முடிவாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்தனர். அந்நேரத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட உடனடியாக அவர் ஓமாந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் நீதிமன்ற ஒப்புதல் பெற்று, அவர் தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு மாற்றப்பட்டார். இந்த சூழலில் தான் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க வாய்ப்பில்லை என்று கூறி அவரை நீக்கி ஆளுநர் நேற்று உத்தரவிட்டுருந்தார்.

இதையும் படியுங்கள் : சென்னைவாசிகளே அலெர்ட்..!