விண்வெளி தொழில் கொள்கைக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் ஸ்பேஸ் ரேஸில் தமிழ்நாடு களமிறங்கியுள்ளது. 

Cabinet approves Space Industry Policy: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

விண்வெளி தொழில் கொள்கை

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், ''முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் காரணமாக தொழில் வளர்ச்சியில், பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக திகழ்கிறது. இதை இப்பொழுது அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். புதிய செக்டர்களில் நமது வளர்ச்சி இருக்க வேண்டும். அதுவும் குறிப்பாக, அட்வான்ஸ் செக்டர்ஸ் – இப்போது நம்முடைய ஸ்பேஸ் டெக்கில், தமிழகம் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி செலுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை-2025 இன்று அமைந்த வகையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

10 ஆயிரம் நபர்களுக்கான வேலை 

இதில் முக்கிய இலக்காக அடுத்த 5 ஆண்டுகளில், விண்வெளித் துறையில், 10,000 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்ப்பது இதன் முக்கிய இலக்கு. குறைந்தபட்சம் 10 ஆயிரம் நபர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்; விண்வெளி துறைக்கு தகுதியான, திறமைவாய்ந்த ஆட்களை உருவாக்குதல்; அதாவது திறமையை உருவாக்குதல் – பத்தாயிரம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்தல் – பத்தாயிரம் நபர்களுக்கான வேலைவாய்ப்பு விண்வெளித் தொழிலுக்கான ஸ்பேஸ் டேக்கில் talent improve செய்வது. இந்த மூன்று இலக்குகளுடன் நாம் பொதுவாக Manufacturing Centre-ல் மட்டும் உற்பத்தித் துறையில் பெரும்பாலும் நமது கவனம் இருக்கும். 

ஆசிரியர்களுக்கு குட்நியூஸ் சொன்ன அரசுத் தேர்வுகள் இயக்குநர்!

மிகவும் முக்கியமான ஒரு அம்சம்

ஆனால், இந்த முறை Space Tech-யை பொறுத்தவரைக்கும், Space Tech Service ல் நம்முடைய கவனம் இருக்க வேண்டுமென்று அமைச்சரவையில் முதல்வர் அறிவுறுத்தலின் பேரில், இந்த ஒப்புதல் கிடைத்துள்ளது. எனவே, இது தமிழகத்தின் Space Tech raceல் இந்தியாவில், ஏன் உலக அளவில் இருக்கும் இந்த போட்டியில் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தின் பாய்ச்சலுக்கு மிகப்பெரிய ஒரு உத்வேகத்தை கொடுத்திருக்கிறார். இதில் 25 கோடி ரூபாயில் இருக்கின்ற சிறிய கம்பெனிக்கும் (Startups) மிகப் பெரிய ஊக்கம் வழங்கப்பட்டுள்ளது. அதுதான் இதில் மிகவும் முக்கியமான ஒரு அம்சம். 

எலான் மஸ்க்க்கு போட்டி

Space Tech developments எல்லாம் ஒவ்வொரு நாளும் அதிவேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இப்பொழுது AI-யின் influence உடன் சேர்ந்து உலகத்தில் இருக்கின்ற அனைத்து டெக்-கும், இந்தியாவில், ஏன் தமிழ்நாட்டிலேயே இப்பொழுது எது வேண்டுமானாலும் செய்யலாம் – தமிழ்நாட்டில் ராக்கெட்டை பிரிண்ட் செய்கிறோம். உலக அளவில் எலான் மஸ்க் இந்த space tech நிறுவனம் எங்கேயோ இருக்கின்றது என்று நினைக்கின்ற நேரத்தில், அதற்குப் போட்டியாக நமது தமிழ்நாட்டில் இங்கே சென்னையில் ஒரு நிறுவனம் மிகச் சிறப்பான பணிகள் எல்லாம் செய்து வருகிறார்கள். 

முதலீடுகளுக்கு ஸ்பெஷல் பேக்

எனவே, அப்படிப்பட்ட நிறுவனங்களை அதற்கு அடுத்து இருக்கும் பல இளம் தலைமுறையினர்களுக்கு Space டெச்ஹ் நிறைய Startups உருவாக்கியிருக்கிறார்கள். அவர்களை எல்லாம் ஊக்குவிக்கும் வகையில், இந்த பாலிசி உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் patents வாங்குவதற்கும் 50 சதவிகிதம் சலுகை நம்முடைய அரசாங்கமே வழங்கும். 300 கோடி ரூபாய்க்கும் மேலான முதலீடுகளுக்கு ஸ்பெஷல் பேக் ஒன்றை உருவாக்கியிருக்கிறோம்.

அதேபோல, தமிழகத்தில் ஒரு சில இடங்களில், ஸ்பேஸ் பே என்று ஒரு சில இடங்கள் அறிவிக்கப்பட்டு, அந்த இடத்தில் முதலீடுகள் வருமேயானால், அதற்கு ஸ்பெஷல் package கொடுப்பதற்கான வழிவகைகள் இந்த பாலிசியில் இருக்கிறது. ஊதிய மானியமாக முதலாம் ஆண்டு 30 சதவிகிதம், இரண்டாம் ஆண்டு 20 சதவிகிதம், அதற்கடுத்து, மூன்றாம் ஆண்டு 10 சதவிகிதம் என்ற ஊதிய அளவில் கூட ஊக்கத்தை இந்த பாலிசி தருகிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தீர்கள் என்றால், தமிழகத்தில் ஒரு புதிய Space Sector-ல் ஒரு பொன்னான நாள் என்று தான் நாம் இன்று இதை சொல்லவேண்டும். 

தமிழ்நாடு ஸ்பேஸ் பாலிசி 

தமிழ்நாடு ஸ்பேஸ் பாலிசி வெளியிடப்பட்ட இந்த நாள், Space Tech கம்பெனியை உருவாக்கக்கூடிய இந்த இளம் தலைமுறையினருக்கு இது மிகப்பெரிய ஒரு அறிவிப்பாக இருக்கும். உலகளவில் இருக்கும் பல தொழில் முனைவோர்களும் இனி நிச்சயமாக தமிழகத்தை நோக்கி வருவார்கள். குறிப்பாக, குலசேகரப்பட்டினம் போன்ற நமது தென் தமிழகத்தில் இருக்கும் பகுதிகளுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். தமிழகத்தில் இருக்கும் பிற பகுதிகளுக்கும் Space Tech சம்பந்தப்பட்ட தொழில்கள் இனி தமிழகத்தை நோக்கி மிகப்பெரிய அளவில் வர இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19ம் தேதி எந்தெந்த பகுதியில் மின்தடை? இதோ லிஸ்ட்!