Watch: பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக அமைச்சர்கள் ஊழல் பட்டியல்; வீடியோ!!
திமுக அமைச்சர்கள் மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் ஊழல் தொடர்பான வீடியோவை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை தற்போதைய திமுக ஆட்சி மற்றும் முந்தைய (2006-2011) திமுக அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட ஊழல்களை ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பலப்படுத்துவேன் என்று கூறி இருந்தார். இது அதிர்ச்சியாக இருக்கும் என்றும் தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று அந்த வீடியோவை சென்னையில் இருக்கும் பாஜக தலைமையகத்தில் வெளியிட்டார்.