TN Corona : மக்களே உஷார்..! சென்னையில் அதிகரித்த கொரோனா..தமிழகம் தாங்குமா ? பீதியில் மக்கள்..

சீனாவில் உருவாகி உலகம் முழுக்க பரவிய கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உருமாற்றம் பெற்று வருகிறது. காமா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என்று இதுவரை பல்வேறு வடிவங்களுக்கு கொரோனா வைரஸ் மாறிவிட்டது. 

Tamil Nadu are in a state of panic as the impact of corona is increasing again after a long day

கொரோனா பாதிப்பு :

இதில் டெல்டா பிளஸ் வகை கொரோனா உலகம் முழுவதும் மாபெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி அதிரவைத்தது. இந்த நிலையில் ஆப்ரிக்க நாடுகள் மூலம் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வடிவத்திற்கு வந்தது. இந்த வடிவமும் பிஏ, பிஏ-1, பி.ஏ-2, பி.ஏ-3 என்று 4 வகையாக உருமாற்றம் அடைந்தது. அதோடு மின்னல் வேகத்திலும் பரவியது. என்றாலும் ஒமைக்ரான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. 

அதே சமயத்தில் டெல்டா பிளசை கட்டுப்படுத்தவும் ஒமைக்ரான் உதவியது. தற்போது உலகம் முழுக்க ஒமைக்ரான் வைரஸ் தான் அதிக அளவில் பரவி இருக்கிறது. இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை ஒமைக்ரான் அலை வீசியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பெரிய பாதிப்பு ஏற்படுத்தாமல் ஒமைக்ரானால் உருவான 3-வது அலை கட்டுக்குள் அடங்கியது. 

Tamil Nadu are in a state of panic as the impact of corona is increasing again after a long day

கொரோனா 4வது அலை :

தற்போது இந்தியாவில் கொரோனா 3-வது அலை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதற்கிடையே கொரோனா 4-வது அலை வருவதற்கு வாய்ப்பு உள்ளதா என்று ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில் 4-வது அலை வர வாய்ப்பு இல்லை என்று உறுதிபட தெரிவிக்கப்பட்டது. என்றாலும் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது தென்கொரியா, சீனா, ஹாங்காங் உள்பட சில நாடுகளில் ஒமைக்ரான் வைரசின் புதிய வடிவம் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஒமைக்ரான் பி.ஏ-2 வகை வடிவம் பரவுவதால் இந்த நாடுகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 58 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

மீண்டும் அதிகரிப்பு :

தமிழகத்தில் நேற்று 61 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது.  சென்னையில் நேற்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று மேலும் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Tamil Nadu are in a state of panic as the impact of corona is increasing again after a long day

இன்று ஒரே நாளில் 118 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 13 ஆயிரத்து 639 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. 

இதனால், கொரோனாவால் தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 38,025 ஆக நீடிக்கிறது. மாநிலம் முழுவதும் 670 பேர் சிகிச்சையில் உள்ளனர். நீண்ட நாள் கழித்து மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதால், தமிழக மக்கள் அனைவரும் பீதியில் இருக்கின்றனர். விஞ்ஞானிகள் சொல்வது போல கொரோனா 4வது அலை வருமா ? என்றும் கவலையில் இருக்கின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios