tamil fishermen arrested by navy
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
நெடுந்தீவு அருகே தமிழக எல்லைப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந் தமிழக மீனவர்கள் 13 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 9 பேர் 2 படகுகளிலும், ராமநாதபுரத்தை சேர்ந்த 4 பேரும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்த கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீ்ன் பிடித்ததாக கூறி 13 தமிழக மீனவர்களை சிறைபிடித்தனர்.. மேலும் அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்தனர்.
இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருவதால் ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கொந்தளிப்பு அடைந்துள்ளனர்.
