ஜல்லிக்கட்டு பண்டைய மன்னர்கள் காலத்தில் பட்டத்து இளவரசனை தேர்வு செய்யவும், படை தளபதிகளை தேர்வு செய்யவும் திருமண வரனை தேர்வு செய்யவும் பயன்படுத்தி நிலையில் நாளேடைவில் மாவீரன் தேர்வு செய்ய நடத்தப்பட்டது.பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.ஸ்பெயின் உள்ளிட்ட உலகின் சில நாடுகளில் எருது அடக்கும் விழாக்கள் இன்றும் நடக்கின்றன. ஆனால் அவை விளையாட்டாகவே நடக்கிறது.
தமிழகத்தில் பொங்கல் விழாவில் மஞ்சு விரட்டு எனும் ஜல்லிக்கட்டு, மாடுகள் ஓட்டப்பந்தயம் எனும் எருது விடும் விழா, தென்மாவட்ட ஏறுதழுதல், 9 பேர் ஒரு மாட்டை கட்டிபிடித்து அழைத்து வருதல் எனும் வட மாடு, ரேக்ளா எனும் மாட்டு வண்டி பந்தயம் 5 போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்,
மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பேரையூர் போன்ற இடங்களிலும் சிவகங்கை மாவட்டத்தில் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை போன்ற இடங்களிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை போன்ற இடங்களிலும் ஜல்லிக்கட்டு மிகவும் புகழ் பெற்றவை.
தமிழகத்தில் ஆரம்ப காலகட்டத்தில் அத்தக்கருப்பன்,அழுக்குமறையன்,அணறிகாலன், ஆளைவெறிச்சான்,ஆனைச்சொறியன்,கட்டைக்காளை,
கருமறையான்,கட்டைக்காரி,கட்டுக்கொம்பன்,கட்டைவால் கூளை,கருமறைக்காளை,கண்ணன் மயிலை,கத்திக்கொம்பன்,கள்ளக்காடன்,கள்ளக்காளை, கட்டைக்கொம்பன்,கருங்கூழை,கழற்வாய்வெறியன்,கழற்சிக்கண்ணன்,கருப்பன்,காரிக்காளை,காற்சிலம்பன்,காராம்பசு,குட்டைசெவியன்,குண்டுக்கண்ணன்,குட்டைநரம்பன்,குத்துக்குளம்பன்,குட்டைசெவியன்,குள்ளச்சிவப்பன்,கூழைவாலன்,கூடுகொம்பன்,கூழைசிவலை,கொட்டைப்பாக்கன்,கொண்டைத்தலையன்,ஏரிச்சுழியன்,ஏறுவாலன்,நாரைக்கழுத்தன்,நெட்டைக்கொம்பன்,நெட்டைக்காலன்,படப்பு பிடுங்கி,படலைக் கொம்பன்,பட்டிக்காளை,பனங்காய்
மயிலை,பசுங்கழுத்தான்,பால்வெள்ளை,பொட்டைக்கண்ணன்,பொங்குவாயன்,போருக்காளை,மட்டைக் கொலம்பன்,மஞ்சள் வாலன்,மறைச்சிவலை,மஞ்சலி வாலன்,மஞ்ச மயிலை,மயிலை,மேகவண்ணன்,முறிகொம்பன்,முட்டிக்காலன்,முரிகாளை,சங்குவண்ணன்,செம்மறைக்காளை,செவலை எருது,செம்ம பறையன்,செந்தாழைவயிரன்,சொறியன்,தளப்பன்,தல்லயன்காளை,தறிகொம்பன்,துடைசேர்கூழை,தூங்கச்செழியன்,வட்டப்புல்லை,வட்டச்செவியன்,வளைக்கொம்பன்,
வள்ளிக்கொம்பன்,வர்ணக்காளை,வட்டக்கரியன்,வெள்ளைக்காளை,வெள்ளைக்குடும்பன்,வெள்ளைக்கண்ணன்,வெள்ளைப்போரான்,மயிலைக்காளை,வெள்ளை,கழுத்திகாபிள்ளை,கருக்காமயிலை,பணங்காரி,சந்தனப்பிள்ளை,சர்ச்சி,சிந்துமாடு,செம்பூத்துக்காரி,செவலமாடு,நாட்டுமாடு,எருமைமாடு,காரிமாடு
உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட தமிழகத்தில் நாட்டு வகைகள் மாடுகள் இருந்தாலும் தற்போது அவை 30 வகைகளாக அழிந்துபோய் விட்டன. மேலும் தற்போது காரி, செந்துரா, மயில, செண்பகம், வெள்ளை, கருநிற, கொட்டு முத்துமுறை, கிழகத்தி, காங்கேயம், புலிகும், உம்பலச்சேரி என குறைவான வகைகளே தற்போது உள்ளது.
ஆரம்ப காலம் முதல் இந்தியாவில் பசுவுக்கு இணையான முக்கியத்துவம் காளைகளுக்கும் இருந்தது. இந்தியா முதுகெலும்பு விவசாயம் தான் ஏர்உழவும், ஏற்றம் இறைக்கவும் வண்டி மாடுகளாகவும் பங்கு இன்றிமையாதாகும். டிராக்டரும், போர்வெல் பம்புகளும், தானியங்கி வண்டிகளும் காளைகளின் இடத்தைப் பூர்த்தி செய்ய வந்த பிறகு அவை வெறும் இனப்பெருக்கத்துக்கான சாதனங்களாக மட்டுமே மாறியது.
மாட்டுவண்டி போட்டி, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் இனக்கட்டுப்பாடு செய்யப்படாதவைகள் என்பதால் இனப்பெருக்கத்துக்கான அதிகம் பயன்படுத்தப்பட்டது. தற்போது காளைகளிடமிருந்து விந்து சேகரிக்கப்பட்டு உறைநிலையில் ஊசி மருந்தாக்கப்பட்டு விற்பனையாகும் நிலை காணப்படுவதால் ஜல்லிக்கட்டு போட்டிக்கெனவே காளைகள் சிறப்பாகத் தயார் செய்ய வேண்டும், மாடுகளுக்கு போஷாக்கான உணவுகள், நீச்சல் பயிற்சி என்று சிறப்பு கவனம் செலுத்தப்படும்,
3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதால் போதிய பராமரிக்க வழியில்லாமால் விவசாயிகள், ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்கள் காளைகள் அடிமாடுகளாகி, பல்வேறு உள்ளூர் மாட்டினங்கள் அழியும் நிலை உள்ளது. ஆனால் பீட்டா அமைப்பு காளைகளின் மூக்கில் மிளகாய் பொடி, கண்களில் எலுமிச்சை சாறு பிழியப்படுகிறது, 50 பேர் காளைகளின் மீது விழுந்து காளைகளை துன்புறுத்துகின்றனர் என கூறி வருவதை ஏற்க முடியாது, தமிழத்தின் அடையாளத்தை இழக்க முடியாது. இனிமேலும் தமிழர்கள் ஏமாந்து இருக்கமாட்டோம் தமிழகத்தின் பராம்பரிய காளை இனங்கள் அழிந்து விட்டதாகவும் தற்போது அவை வெளிநாட்டில் மட்டும் பாதுகாக்கப்பட்டு வரும் அவலம் உள்ளது.
தமிழகத்தின் ஜல்லிக்கட்டு விளையாட்டை 2014ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தடை செய்தது. 3 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெறவில்லை, இந்த ஆண்டு நடக்கும் என தமிழர்கள் எதிர்பார்த்த நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் இடைக்கால தீர்ப்பு எதுவும் வழங்க முடியாது என கூறியது.
மத்திய மாநில அரசுகள் அவசர சட்டம் நிறைவேற்றி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த இளைஞர் நேரடியாக தற்போது போராட்டத்தில் குதித்துள்ளார்
தமிழகத்தில் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும்,தமிழர் பண்பாட்டை ஒழித்து கட்ட முயற்சி செய்யும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டுமென தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது.
