taking from soil in Komukai dam Minister CV Shanmugam start the function
விழுப்புரம்
கோமுகி அணையில் வண்டல் மண் எடுக்கும் சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை பணியை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்து, விழாவைச் சிறப்பித்தார்.
விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறவும், விவசாய நிலங்களை செம்மைப்படுத்துவதற்கும் பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டிலுள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு அதிலுள்ள வண்டல் மண்ணை எடுத்து இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கும் பணிகள் நடைப்பெற்று வருகிறது.
அந்த வகையில் கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையில் வண்டல் மண் எடுக்கும் பணிக்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு, பிரபு, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முருகவேல் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்று வண்டல் மண் எடுக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
இதில் கள்ளக்குறிச்சி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராஜசேகர், முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல் பாபு, சின்னசேலம் தாசில்தார் வெங்கடேசன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிரபு உள்பட பலர் பங்கேற்றனர்.
