Asianet News TamilAsianet News Tamil

மகாத்மா காந்தி நினைவு நாளில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

அனைவரும் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும் என வலியுறுத்தும் வகையில் காந்தி நினைவு நாளில் மத நல்லிணக்க உறுதிமொழியை ஏற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Take a pledge for religious harmony on Mahatma Gandhi Memorial Day: MK Stalin sgb
Author
First Published Jan 29, 2024, 12:08 AM IST

மகாத்மா காந்தி நினைவு நாளான ஜனவரி 30ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.

நாடு சந்தித்து வரும் மதவெறி பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும், நாட்டு மக்கள் அனைவரும் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் வகையிலும் இந்த மத நல்லிணக்க உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "75 ஆண்டுகள் ஆனபிறகும் அண்ணல் காந்தியார் மீதான கோபம், வகுப்புவாதிகளுக்கு குறையவில்லை. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் காந்தியாரை வலதுசாரி சக்திகள் இழிவுபடுத்துவது தொடர்கதை!

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படவில்லை: யுஜிசி விளக்கம்

Take a pledge for religious harmony on Mahatma Gandhi Memorial Day: MK Stalin sgb

இந்தியா முழுமைக்குமான ஒற்றுமையின் அடையாளமாக இருக்கின்ற அண்ணல் காந்தியின் புகழைச் சிதைப்பதன் மூலமாக இந்திய நாட்டின் பன்முகத் தன்மையை சிதைக்க முயற்சிக்கிறார்கள். 

'காந்தியால் இந்த நாட்டுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை' என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லி இருப்பதும் இதே வன்மம் கலந்த நோக்கத்துடன்தான்.

அண்ணல் காந்தி அடிகளின் பிறந்தநாளை 'சுவச்ச பாரத் அபியான்' என மாற்றியதில் இருக்கிறது இவர்களது அழித்தல் வேலைகள். இது காந்தியின் அனைத்து அடையாளங்களையும் அழித்தல் ஆகும். அதே போன்ற காரியத்தைத்தான் அக்டோபர் 2-ஆம் நாள் ஊர்வலம் நடத்துவதன் மூலமாக ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு திசைதிருப்பப் பார்த்தது. அதை தமிழ்நாடு அரசு தடுத்தது!

மதநல்லிணக்கத்தின் அடையாளமான அண்ணல் காந்தியடிகள் அவர்கள் மதவெறியர்களால் கொல்லப்பட்ட ஜனவரி 30-ஆம் நாளை, நாடு முழுவதும் மதநல்லிணக்க நாளாகக் கடைப்பிடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்"

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

மதுரை கோயிலில் பிரியாணி திருவிழா! 200 ஆடுகள், 300 கோழிகளை பலியிட்டு தடபுடலான அன்னதானம்!

Follow Us:
Download App:
  • android
  • ios