ஜல்லிக்கட்டில் இறங்கிய 2  கில்லி காளை....!  டிஆரும், எஸ்டி ஆரும் கலக்கல்   பேட்டி.....!!!

பொங்கல் திருநாள்  நெருங்குவதை யடுத்து, ஜல்லிகட்டுக்கு  இன்னமும்  அனுமதி மறுக்கப்டுவதை   எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள தமிழ்  உணர்வாளர்கள்  அனைவரும் ,  ஜல்லிகட்டு   நடத்த  வேண்டுமேன ஆங்காங்கு  ஆதரவு குரல் கொடுத்து போராடி  வருகின்றனர்.

இந்நிலையில்,   ஜல்லிக்கட்டு  குறித்து  தன் ஆதரவை வெளிபடுத்தும்  விதமாக ,  சும்மா  கில்லியாக   தன் ஆதங்கத்தை  வெளிப்படுத்தினார் நடிகர்  சிம்பு .....

தமிழர்கள்  என்ன   அநாதைகளா..?

கேட்க  யாரும் இல்லை  என  நினைச்சிட்டு இருக்கீங்களா?

வற்புறுத்தி  பெறப்படும்  மாட்டின்  பாலை  குடித்துவிட்டு , ஜல்லிக்கட்டுக்கு எதிராக  பேசுவதா ? என  தொடர்ந்து   தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்  சிம்பு

அவரை  தொடர்ந்து, தன்  மகன்  சிம்புவுக்கும் , ஜல்லிகட்டுக்கும்  ,ஆதரவை  தெரிவித்தார்                       டி ராஜேந்தர் 

தன் மகனும்  நடிகருமான  சிம்பு , ஜல்லிகட்டுக்கு ஆதரவு  தெரிவித்ததையும் , நாளை மாலை 5 மணிக்கு கருப்பு  சட்டை  அணிந்து , மவுன   போராட்டம்   நடத்துவதாக  அறிவித்ததற்கும் , தன் ஆதரவை  தெரிவித்துள்ளார் டி ராஜேந்தர்