சென்னை, தியாகராயக நகர் சத்தியநாராயணா. கடந்த தேர்தலில் திமுகவில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட என்.வி.என்.சோமுவின் மகள் டாக்டர் கனிமொழியை விட அதிக வாக்குகள் பெற்று அதிமுக சார்பில் வெற்றி பெற்றவராவார். 

இளம் வயது எம்.எல்.ஏ.வானா, தி.நகர் சத்யா, ஆந்திராவின் சித்தூர், திருப்பதி ஆகிய பகுதிகளில் ஏராளமான தொழில்கள் செய்து வருவதாக தெரிகிறது. தெலுங்கை தாய்மொழியாக கொண்ட இவர், பெரும்பாலான நேரம் திருப்பதி, சித்தூர் மாவட்டத்தில் சென்று தொழில் ரீதியாக தங்கி வருவதும் உண்டு. 

இந்த நிலையில்தான், தி.நகர் எம்எல்ஏ சத்யாவிற்கு, இரண்டு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. அதுவும், ஒரு மாநிலத்தில் இருந்தால் கூட பிரச்சனை இல்லை. அண்டை மாநிலமான, ஆந்திராவின், சித்தூர் மாநிலத்தை சேர்ந்த திருப்பதியில் மற்றொரு வாக்காளர் அட்டை இருப்பதாக கூறப்படுகிறது.

தி.நகர் எம்.எல்.ஏ.வான சத்யா 2011 - 16 ஆம் அண்டுகளில் சென்னை மாநகராட்சியில் 130 வார்டு கவுன்சிலராக இருந்தவர். சிஎம்டிஏவில் நியமன குழு உறுப்பினராகவும் இருந்தவர். 2016 சட்டமன்ற தேர்தல் வேட்பாளருக்கான படிவத்தை தாக்கல் செய்தபோது, தனக்கு தி.நகரில் மட்டும் வாக்குரிமை உள்ளதாக அபிடவிட்டில் தெரிவித்திருந்தார்.

ஆனால், ஆந்திர மாநிலம சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதியில், 257-ன்கீழ் பிளாட் 405, 4-வது மாடி பத்மாவதி டவர்ஸ், என்னும் முகவரியில் அவருக்கு வாக்காளர் அடையாள அட்டை உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த அடையாள அட்டையின் எண்.AYM2119387. 

ஆனால், பிறந்த தேதி மட்டும் இதில் மாறி உள்ளது. இந்த அடையாள அட்டை முழுவதும் தெலுங்கில் உள்ளது. இது உண்மையில் தி.நகர் சத்யாவின் அடையாள அட்டைதானா? அல்லது யாரேனும் அவரை கலாய்ப்பதற்காக அல்லது சிக்கலை ஏற்படுத்துவதற்காக போலியான அடையாள அட்டையை உருவாக்கினார்களா? என்பது தெரியவில்லை.

ஒருவேளை, தி.நகர் சத்யாவுக்கு இரண்டு மாநிலங்களில் அடையாள அட்டை இருந்தால் அவரது பதவிக்கே இது வேட்டு வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கூவத்தூர் எம்.எல்.ஏ. கேம்ப்-ன் போது தொலைக்காட்சி கேமராமேன், கேமராவை ஆன் செய்திருப்பது தெரியாமல் 3 வேளையும் பாயா, சேமியா கொடுத்து மட்டையாக்கிடுறாங்க என சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர்தான் இந்த தி.நகர் சத்யா.