Asianet News TamilAsianet News Tamil

அரசு மெத்தனம்.. பீதியில் தமிழக மக்கள்... பன்றி காய்ச்சலுக்கு இன்று ஒரே நாளில் 6 பேர் பலி

பன்றி காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த 6 பேர், இன்று ஒரே நாளில் இறந்தனர். இதனால், பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

Swine flu...6 people death
Author
Trichy, First Published Nov 9, 2018, 3:02 PM IST

பன்றி காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த 6 பேர், இன்று ஒரே நாளில் இறந்தனர். இதனால், பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் அத்தனூரை சேர்ந்த வர் அங்காயி . இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்  காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. Swine flu...6 people death

பின்னர், சேலம் அரசு மருத்துவமனையில் அங்காயி சேர்க்கப்பட்டார். அங்கு அவரது ரத்த பரிசோதனையில், பன்றி காய்ச்சல் இருப்பது தெரிந்தது. தொடர்ந்து டாக்டர்கள், அங்காயிக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதேபோல், மதுரை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவேடகத்தை சேர்ந்த லட்சுமி, திருமங்கலத்தை சேர்ந்த சுப்புலட்சுமி ஆகியோரரும் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தனர்.Swine flu...6 people death

மேலும், கோவை மாவட்டம் சூலூரில் புஷ்பா , பீளமேட்டில் காயத்ரி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கீழ ஓடைத்தெருவை சேர்ந்த மல்லிகா ஆகியோர் பன்றி காய்ச்சலுக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் டெங்கு, பன்றி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஏராளமானோ இறக்கின்றனர். இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios