Asianet News TamilAsianet News Tamil

Swiggy Delivery Employees:தமிழகம் முழுவதும் ஸ்விக்கி ஊழியர்கள் இன்று ஸ்டிரைக் அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?

தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கம் (CITU) சார்பாக 22.05.2023 முதல் தமிழகத்தில் உள்ள SWIGGY ஊழியர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபடுவதென முடிவெடுத்திருக்கிறோம்.

Swiggy employees across Tamil Nadu strike today
Author
First Published May 22, 2023, 10:34 AM IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உணவு மற்றும் இதர பொருட்களை விநியோகிக்கும், ஸ்விக்கி ஊழியர்கள் சங்கம் இன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதுதொடர்பாக ஸ்விக்கி ஊழியர்கள்  சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கம் (CITU) சார்பாக 22.05.2023 முதல் தமிழகத்தில் உள்ள SWIGGY ஊழியர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபடுவதென முடிவெடுத்திருக்கிறோம்.

Swiggy employees across Tamil Nadu strike today

கடந்த ஒரு வருடமாக பல்வேறு போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் இயக்கங்கள் நடத்தி கோரிக்கை மனு நிர்வாகத்திற்க்கும் தொழிலாளர் துறைக்கு அனுப்பியும் இதுவரை பேச்சு வார்த்தை மற்றும் எங்களது கோரிக்கை மீது தீர்வு காண இயலவில்லை,ஆகவே வேறு வழியின்றி 22.05.2023 முதல் வேலை நிறுத்ததில் ஈடுபடுவது என 26.04.2023 அன்று நடந்த எங்களது சங்க பேரவை கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம். அதன் அடிப்படையில் வேலை நிறுத்ததில் ஈடுபடுவது என்று முடிவு செய்துள்ளோம்.

கோரிக்கைகள்:

* அனைத்து ஊழியர்களுக்கும் பழைய Pay-out முறையை வழங்க வேண்டும்.

* புதிய ஸ்லாட் முறையை திரும்ப பெற வேண்டும்.

* சீனியர் DE களுக்கு ஏற்கனவே வழங்கி வந்த மாத ஊக்க தொகையை மீண்டும் வழங்க வேண்டும்.

* ஏற்கனவே வழங்கி வந்த Tum over ஊக்க தொகையை மீண்டும் வழங்க வேண்டும்.

* ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.10 வழங்க வேண்டும்

* ஒரு ஆர்டருக்கு மினிமம் ரூ.30 வழங்க வேண்டும்

* பேட்ச் ஆர்டருக்கு ரூ.20 வழங்க வேண்டும்.

* காத்திருப்பு கட்டணத்தை ஆர்டர் தொகையுடன் இணைக்காமல் தனியாக வழங்க வேண்டும்.

* Swiggy order வேறு எந்த கம்பெனிக்கும் கொடுக்ககூடாது. Swiggy DE களுக்கு மட்டுமே கொடுக்கவேண்டும்.

* Firstmile ஆர்டருக்கு முழுமையான கட்டணத்தை வழங்க வேண்டும்.

* முறையான காரணம் இல்லாமல் அபராதம் விதிக்கக்கூடாது.

* உணவகங்களில்  உணவு ரெடியாகும் முன்பே உணவு ரெடி என்று கொடுத்துவிட்டு நீண்ட நேரம் கழித்து உணவு கொடுப்பதை சரி செய்ய வேண்டும். அப்படி நேரம் கழித்து கொடுக்கும் உணவுகளுக்கு DE மீது காரணம் சொல்லி அபராதம் போடக் கூடாது.

* உணவகங்களில் உணவு இல்லை என்றால் ஆர்டர் Rejected போடாமல் கேன்சல் மட்டுமே செய்யப்பட வேண்டும். 

* உணவகங்களில் DE களுக்கு வாகனம் நிறுத்தும் வசதி தருவதோடு உரிய  மரியாதையை உறுதி படுத்த வேண்டும். 

* முன்பு இருந்தது போல நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 reject-களுக்கு அனுமதி வழங்கவேண்டும்.

* Wrong location தூரத்திற்கு டெலிவரி கொடுத்தவுடன் pay-out வழங்க லேண்டும்

* கஸ்டமர் ரெஸ்பான்ஸ் இல்லை என்றால் அதிகபட்சம் 15 நிமிடத்தில் ஆர்டர் கேன்சல் செய்யப்பட வேண்டும்.

* Last mile-க்கு சரியான கிலோ மீட்டர் வழங்ப்பட வேண்டும்

* DE களுக்கு விபத்து நடந்தால் சம்பந்தப்பட manager உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட DEகளுக்கு Swiggy செயலில் தேவையான மருத்துவம், Insurance சம்பந்தப்பட்ட உதவிகளை செய்ய வேண்டும்.

* Instamart-ல் டோக்கன் முறையை ரத்து செய்ய வேண்டும், உள்ளிட்ட 30 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றை நிறைவேற்றக்கோரி, ஸ்விக்கி நிறுவன ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

* Instamart-ல் காத்திருப்பு கட்டணத்தை வழங்கிட வேண்டும். 

* Instamart-ல் Bulk order களுக்கு உணவு ஆர்டருக்கு வழங்குவது போல் Auto அல்லது Taxi கட்டணத்தை வழங்கிட வேண்டும்.

* Instamart-ல் ஆர்டர் பொருட்களை வழங்காமல் அதற்கு முன்பு பிக்கப் செய்து கஸ்டமரிடம் போன் செய்து கொடுத்தால்தான் ஆர்டர் பொருள்கள் வழங்கப்படும் என்று மிரட்டுவதை நிறுத்த வேண்டும்.

* சில வருடங்களுக்கு முன்பு வெயில் காலங்களில் கொடுத்தது போல் அதன் பலன்களை வழங்கிட வேண்டும்.

* மழை பெய்யும் போது Rain charge ஒரு ஆர்டருக்கு ரூ 25 வழங்கிட வேண்டும். 26.T Shirt 3 மாதங்களுக்கு ஒன்றும் Bag 11 மாதங்களுக்கு ஒன்றும் கட்டாயம் வழங்கிட வேண்டும்.

* DE களுக்கு Swiggy கிச்சன்களில் பாத்ரூம் வசதி மற்றும் போன் சார்ஜர் வசதி செய்து தரப்பட வேண்டும்.

* கஸ்டமர் கேர்களில் தமிழில் மட்டுமே பேச வேண்டும்.

* ஒவ்வொறு வாடிக்கையாளரும் எங்களது சர்வீஸ்க்கு வழங்கும் ஸ்டார் ரேட்டிங் எங்களது போன்களில் டிஸ்ப்ளேயில் தெரிய வேண்டும்.

* DE களுக்கு விரோதமாக நடந்து கொள்ளும் Fleet manager களை திரும்ப பெற்று வேறு Fleet manager களை திரும்ப பெற்று வேறு Fleet manager களை நியமிக்க வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios