suspected a girl kidnaped in ashok pillar today
சந்தேகத்தை ஏற்படுத்திய வாகனம் TN13 K 2585..? மயங்கிய நிலையில் முகத்தை மறைத்து கடத்தலா..?! அசோக் பில்லரை கடந்த போது..
சிறுமிகளை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்வது, கடத்தி வட மாநிலங்களில் விற்று விடுவதும், அநாதை இல்லத்தில் கணக்கு காண்பிக்கவும் நாளுக்கு நாள் சிறுமிகளை கடத்தும் கும்பல் அதிகரித்து வருகிறது
மேலும், ஆங்காங்கு சிறுமிக்கு இழைக்கப்படும் பாலியல் வன்புணர்வில் உயிரிழக்கும் அவலமும் நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று மதியம் கோயம்பேட்டிலிருந்து அசோக் பில்லரை நோக்கி பயணித்த இருசக்கர வாகனத்தில் 7 அல்லது 8 வயது மதிக்கத்தக்க சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்ற தோணி தென்பட்டு உள்ளது
அந்த சிறுமியின் கால்கள் தொங்கிய வண்ணமும்,
ஒரு காலில் மட்டுமே செருப்பு உள்ளதாகவும்,
மயங்கிய நிலையில்
பின்னால் ஒரு நபர் அமர்ந்து அந்த சிறுமியின் முகத்தை கருமை நிற துணியால் மறைத்து சென்றதாகவும் தெரிகிறது
இதனை கண்ட காரில் வந்த ஒரு நபர் இதனை கிளிக் செய்து இந்த விவரத்தை ஆங்கிலத்தில் பதிந்து செய்தி நிறுவனத்திற்கும், வாட்ஸ் ஆப் மூலம் பகிர்ந்து உள்ளார்
இந்த சிறுமி கடத்தப்பட்டாரா? அல்லது உறவினர் யாருடனாவது நம்பி சென்றாரா .? பல கோணங்களில் பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் யார் என்பதை காவலர்கள் கண்டுபிடித்து விசாரணை நடத்தினால் மட்டுமே யார் அந்த சிறுமி மற்றும் என்ன நிலவரம் என்ற உண்மை வெளிவரும்.
இதனை வெகுவாக பகிர்ந்து உண்மை நிலை வெளிவர வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமுமாக உள்ளது
