காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஸ்கீம் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறோமே தவிர காவிரி மேலாண்மை வாரியம் என்று கூறவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த விளக்கம் தமிழக விவசாயிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காவிரி நதிநீர் வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. தமிழகத்துக்கு வழங்கப்படும் காவிரி நீர் குறைத்த உச்சநீதிமன்றம், காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் திட்டத்தை அமைக்குமாறு உத்தரவிட்டது. மேலும், காவிரி மேலாண்மை ஸகீம் என
குறிப்பிடப்பட்டிருந்த அந்த வார்த்தை காவிரி மேலாண்மை வாரியம் என புரிந்து கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால்தான் காவிரி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் எனக் கூறி தமிழக விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுததி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறிய ஸ்கீம் என்ற வார்த்தைக்க விளக்கம் கேட்டு மத்திய அரசு நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தது. இது குறித்து இன்று விளக்கமளித்த உச்சநீரிமம்னறம், காவிரி தீர்ப்பில் செயல் திட்டம் தான் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலாண்மை வாரியம் குறிப்பிடவில்லை என்று விளக்கமளித்தது.

ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் கிடையாது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா விளக்கமளித்துள்ளார். தமிழகத்துக்கு இது பெரிய பிரச்சனைதான் என்றும், தமிழகத்துக்குரிய காவிரிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என தமிழக விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், நாங்கள் கூறியது காவிரி மேலாண்மை வாரியம் அல்ல என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது தமிழக விவசாயிகள்ன தலையில் பேரிடியாக இறங்கியுள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9 ஆம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.