Asianet News TamilAsianet News Tamil

தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

Supreme Court dismisses the state government request
Supreme Court dismisses the state government request
Author
First Published Apr 3, 2018, 11:07 AM IST


காவிரி வழக்கில், மத்திய அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், மத்திய அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்பதாகவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

காவிரி நதிநீர் வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. தமிழகத்துக்கு வழங்கப்படும் காவிரி நீர் குறைத்த உச்சநீதிமன்றம், காவிரி பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் திட்டத்தை அமைக்குமாறு உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால்தான் காவிரி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் எனக் கூறி தமிழக விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுததி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறிய ஸ்கீம் என்ற வார்த்தைக்க விளக்கம் கேட்டு மத்திய அரசு நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தது. இது குறித்து இன்று விளக்கமளித்த உச்சநீரிமம்னறம், காவிரி தீர்ப்பில் செயல் திட்டம் தான் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலாண்மை வாரியம் குறிப்பிடவில்லை என்று விளக்கமளித்தது.

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவை உச்சநீரிமன்றம் நிராகரித்துள்ளது. அதாவது, மத்திய அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்று தமிழக அரசு அந்த மனுவில் கூறியிருந்தது. இதனை நிராகரித்த உச்சநீரிமன்றம், மத்திய அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்தது. காவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் கோரிய மத்திய அரசின் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. இந்த நிலையில் வரும் 9 ஆம் தேதி தமிழக அரசின் மனுவுடன் மத்திய அரசின் மனுவும் விசாரணைக்கு வர உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios