கன்னியாகுமாரி.. பத்துகானி அருகே பரபரப்பு - மேற்கு தொடர்ச்சி மலையில் திடீர் வெடிப்பு - அச்சத்தில் மக்கள்!
Kanyakumari Western Ghats : கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில், திடீரென வெடிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் வாழ்த்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அருகே உள்ள ஊர் தான் பத்துகாணி, மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை இந்த ஊரில் இருந்து பார்த்து ரசிக்க முடியும். இந்நிலையில் பத்துகாணி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் திடீரென வெடிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரும் புழுதி காற்றில் பரவி கிடப்பதை நம்மால் தெளிவாக பார்க்க முடிகின்றது.
எதனால் இந்த நிலை ஏற்பட்டது என்பது குறித்து அறியாமல் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தற்பொழுது பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். வருகின்ற திங்கட்கிழமை அன்று இந்திய புவி அறிவியல் ஆய்வாளர்களில் குழு, நேரில் அங்கு சென்று ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைகள்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இருந்து தமிழகத்தின் கன்னியாகுமரி வரை நீண்டிருக்கும் சுமார் 1600 கிலோமீட்டர் நீள மலை தான் இந்த மேற்கு தொடர்ச்சி மலைகள். யுனெஸ்கோ இதை உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது. உலக அளவில் சுமார் 36 பல்லுயிர் பெருக்கங்கள் இருக்கின்ற இடங்களில் இந்த மேற்கு தொடர்ச்சி மலைகளும் ஒன்று.
சரியாக சொல்ல முடியவில்லை என்றாலும் சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உருவான மலைத்தொடர் இது என்று கூறப்படுகிறது. இந்த மலைத்தொடர் தப்தி ஆற்றின் தெற்கே தொடங்கி குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வழியாக சுமார் 1,600 கிமீ ஓடி, இந்தியாவின் தென் முனைக்கு அருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் முடிவடைகிறது.