Asianet News TamilAsianet News Tamil

முருகன் கோயிலில் 9 எலுமிச்சை பழம் ரூ.2,36,100க்கு ஏலம்! பொதுமக்கள் போட்ட போட்டி! அப்படி என்ன இருக்கு இதுல?

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த் ரத்தினவேல் முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கருவறையில்  5 அடி உயரத்தில் முருகனின் வேல் மட்டுமே பொதுமக்கள் வணங்கி வருகின்றனர்.

nine lemons auctioned for Rs. 2 36 lakh in Rathnavel Murugan temple tvk
Author
First Published Mar 28, 2024, 11:29 AM IST

திருவெண்ணெய்நல்லூர் ரத்தினவேல் முருகன் கோயிலில் 9 எலுமிச்சை பழங்கள் ரூ.2,36,100 ஏலம் போன சம்பவம் பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த் ரத்தினவேல் முருகன் கோயில் உள்ளது. இக்கோவிலில் கருவறையில்  5 அடி உயரத்தில் முருகனின் வேல் மட்டுமே பொதுமக்கள் வணங்கி வருகின்றனர். இக்கோயிலில் ஆண்டுத்தோறும் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 15ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி 23ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற்றது. 

இதையும் படிங்க: Tulasi Vastu : வீட்டில் துளசி செடி இருக்கா? அப்ப இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. பண கஷ்டம் அதிகரிக்குமாம்..

இந்த 9 நாட்களும் ரத்தினவேல்  முருகன் கோயிலில் இருக்கும் 5 அடி உயர வேலில் ஒவ்வொரு எலுமிச்சை பழம் சொருகி வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது வந்தது. மொத்தம் 9 எலுமிச்சை பழங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். 9 நாள் திருவிழாவில் வைத்து பூஜை செய்யப்பட்ட 9 எலுமிச்சை பழங்களும் ஒவ்வொன்றாக ஏலம் விடப்பட்டன.  

ஒவ்வொரு எலுமிச்சை பழமும் 100 ரூபாய்க்கு தொடங்கி 1000, 2000, 3000 என ஏராளமானோர் போட்டி போட்டு கொண்டு ஏலம் கேட்டனர். இதில் அதிகபட்சமாக முதல் நாள் திருவிழாவில் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை பழம் 50,500 ரூபாய்க்கும், 2ம் நாள் எலுமிச்சை பழம் ரூ.26,500க்கும்,  3ம் நாள் எலுமிச்சை பழம் ரூ.42,100க்கும்,  4 ம் நாள் எலுமிச்சை பழம் ரூ.19 ஆயிரத்திற்கும்,  5ம் நாள் எலுமிச்சை பழம் ரூ.11 ஆயிரத்திற்கும்,  6ம் நாள் எலுமிச்சை பழம் ரூ.34 ஆயிரத்திற்கும்,  7ம் நாள் எலுமிச்சை பழம் ரூ.24,500க்கும்,  8ம் நாள் எலுமிச்சை பழம் ரூ.13,500க்கும்,  9ம் நாள் எலுமிச்சை பழம் ரூ.15 ஆயிரத்திற்கும் என மொத்தம் உள்ள 9 எலுமிச்சை பழங்களும் ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 100க்கு ஏலம் போனது.

இதையும் படிங்க:  Black Thread : நடிகைகள் காலில் கருப்பு கயிறு கட்டுவதற்கு இது தான் காரணமா? இதில் இவ்வளவு நன்மைகளா?

எலுமிச்சை பழத்தை ஏலம் எடுத்தவர்கள் உடலில் தண்ணீரை ஊற்றுக் கொண்டு பூசாரி முன்பு மண்டியிட்டு புடவையின் முந்தானையில் எலுமிச்சை பழத்தினை பெற்றுக் கொண்டனர். இந்த எலுமிச்சை பழத்தினை வாங்கி சென்றால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் விரைவில் திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios