சிறப்பு எஸ்ஐ, பெண் தலைமை காவலருக்கு முத்தம் கொடுத்த காட்சி வீடியோ, வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை வெளியிட்டது யார் என திருச்சி எஸ்பி அலுவலகத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சிறப்பு எஸ்ஐ, பெண் தலைமை காவலருக்கு முத்தம் கொடுத்த காட்சி வீடியோ, வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை வெளியிட்டது யார் என திருச்சி எஸ்பி அலுவலகத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக இருந்தவர் பாலகிருஷ்ணன் (54). கடந்த 12ம் தேத, காவல் நிலையத்தில் இரவு பணியில் இருந்த சசிகலா (34) என்பவருக்கு முத்தம் கொடுத்தார். 

அப்போது அங்கு தற்செயலாக வந்த தனிப்பிரிவு ஏட்டு கேசவனிடம் சசிகலா புகார் செய்தார். இதையடுத்து அவர் சசிகலாவின் புகாரை எஸ்பிக்கு அனுப்பினார். இதைத் தொடர்ந்து, பாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காவல் நிலையத்தில் முத்த மழை பொழிந்த வீடியோ காட்சி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் காவல் நிலையதில் இருந்த இந்த வீடியோ பதிவு, விசாரணைக்காக எஸ்பியிடம் அளிக்கப்பட்டது. அந்த பதிவு தற்போது வெளியானது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்பி அலுவலகம் மூலம்தான் இது வெளியாகி இருக்கும் என உயர் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதை வெளியிட்ட கருப்பு ஆடு யார் என அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.