ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆவேசமான மாணவர்கள் …இழுத்து மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள்…

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி தமிழகம் முழுவதும் கடந்த ஐந்து நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும்,பீட்டாவிற்கு தடை விதிக்க வலியுறுத்திம் கல்லூரி மாணவ, மாணவியர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் பற்றவைத்த இந்த தீ தற்போது கொளுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது.

சென்னை, மதுரை, கோவை,திருச்சி, ஈரோடு, திருப்பூர், புதுச்சேரி என மாணவர்களின் அத்துமீறிய இந்த அமைதிப்போராட்டம் தமிழகத்தையே கிடுகிடுக்க வைத்துள்ளது,

சென்னை மெரினாவில் மாணவர்களும் இளைஞர்களும் நடத்தி வரும் தொடர் போராட்டம் இன்று 3 வது நாளாக நீடித்து வருகிறது.

மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தின்போது தமிழக அரசின் சதியால் மின்சாரம் தடைபட்டது.

அப்போது தங்களின் செல்போனில் உள்ள டார்ச் மூலம் போராட்டத்தை தொடர்ந்தனர் மாணவர்கள். இந்த போராட்டத்திற்கு தனியார் நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள் ஆதரவு அளித்துள்ளனர். 

முதலமைச்சர் ஓபிஎஸ் போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டுமென வலியுறுத்தியும் மாணவர்கள் அடங்க மறுத்து போராட்டத்தில் உறுதியுடன் உள்ளனர்.

ஆனால் மாணவர்களின் இந்த போராட்டத்தை தடைசெய்ய அரசு இயந்திரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்த சதியின் ஒரு பகுதியாக பள்ளிகள், கல்லூரிகள் ஒவ்வொன்றாக இழுத்து மூடப்பட்டு வருகின்றன.

.போராட்டம் தீவிரமடைந்து வருவதால் சென்னையில் 31 உள்ள தனியார் மற்றும் அரசு கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டடுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக்கல்லூரிகளும் இழுத்து மூடப்பட்டுள்ளன.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை வேளாண் பல்கலைக்கழகம் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து வேளாண் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகங்கம் ஆகியவையும் இன்றும், நாளையும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டள்ளது.

இதேபோன்று தமிழகம் முழுவதும் அனைத்து கலைகல்லூரிகளும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இந்த எழுச்சிப் போராட்டம் தற்போது மாணவர்களின் கைகளிலேயே உள்ளது. ஜல்லிக்கட்டு நடத்தும்வரை ஓயமாட்டோம் என உறுதியுடன் உள்ளனர்..என்று திறக்கப்படுமோ இந்த கல்வி நிறுவனங்கள்…