திருவாரூர்

திருவாரூரில், திரு.வி.க அரசு கல்லூரியின் நிர்வாகத்தைக் கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் திருவாரூரில் திரு.வி.க அரசு கல்லூரியின் நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் அரசு தாயுமானவன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நாகை மாலி ஆகியோர் பங்கேற்றுப் பேசினார்.

இதில் மாவட்டச் செயலாளர் கந்தசாமி, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஜோதிபாசு, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் “கல்லூரிக்கு நிரந்தர முதல்வரை நியமிக்க வேண்டும்.

கல்லூரி நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட மூன்று மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மூன்று மாணவர்களின் தேர்வு முடிவுகளை பாரதிதாசன் பல்கலைக்கழகமே இணையதளத்தில் வெளியிட வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள எழுப்பப்பட்டன.