Asianet News TamilAsianet News Tamil

#BREAKING:students death in Nellai:பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு.. முதலமைச்சர் நிவாரண நிதி அறிவிப்பு..

திருநெல்வேலி சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 

students death in Nellai
Author
Nellai, First Published Dec 17, 2021, 3:30 PM IST

நெல்லையில் அரசு உதவி பெறும் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த துயர சம்பவத்தையடுத்து, உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா பத்து லட்சம் ரூபாயும், காயமுற்ற நான்கு மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட அவர் உத்தரவிட்டுள்ளார்.

students death in Nellai

திருநெல்வேலி மாநகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். வழக்கம் போல் இன்று பள்ளி இயங்கி வந்த நிலையில், காலை 11 மணியளவில் இடைவேளை நேரம் வந்தது. அப்போது மாணவர்கள் கழிவறைக்கு செல்லத் தொடங்கினர். கழிவறையின் ஒரு பகுதிக்கு வெளியே மாணவர்கள் காத்து நின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் விபத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த 5 மாணவர்கள் உயர் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒரு மாணவன் பலியாகியுள்ளார். இதனால் விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 3 ஆக உயர்ந்துள்ளது. 

இதைப்பார்த்த சக மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.100 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக சொல்லப்படும் இந்த பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர். சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது.

students death in Nellai

இதனிடையே பள்ளியில் இன்று காலை கழிப்பறைத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 9-ஆம் வகுப்பு மாணவர் அன்பழகன், 8ஆம் வகுப்பு மாணவர் விஷ்வ ரஞ்சன், 6ஆம் வகுப்பு மாணவர் சுதீஸ் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இசக்கி பிரகாஷ், சஞ்சய், ஷேக் அபுபக்கர்மற்றும் அப்துல்லா ஆகிய நான்கு மாணவர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெர்விக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது திருநெல்வேலி சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios