Students can apply for first copy and reassessment ...
பெரம்பலூர்
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து வரும் மே 15 முதல் விடைத்தாள் நகல் பெறவும் மறுகூட்டலுக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து முதன்மைக்கல்வி அலுவலர் தி.அருள்மொழிதேவி செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டார்.
அதில், “வருகிற மே 15 முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மே 17 ஆம் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் பயின்ற, தேர்வெழுதிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெறலாம்.
விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் மே 15 முதல் விண்ணப்பிக்கலாம்.
தேர்வர்கள் தங்களுக்கு விடைத்தாளின் நகல் தேவையா அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா என்பதை முன்னரே தெளிவாக முடிவு செய்து கொண்டு, அதன் பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.
விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க இயலும்” என்று அந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
