பாடத்தை கவனிக்காத நான்காம் வகுப்பு மாணவிக்கு, மாட்டுக்குப் போடும் ஊசியைக் கொண்டு குத்தியதால் அந்த மாணவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், ஆலம்பட்டி கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தீனா மேரி என்ற மாணவி 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

தீனா மேரி, வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஆனால், மாணவி தீனாமோரி, பாடத்தைக் கவனிக்காமல், சக மாணவியுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். மேலும் மாட்டிற்கு பயன்படுத்தப்படும் ஊசியை வைத்துக் கொண்டு தீனா மேரி
விளையாடி கொண்டிருந்துள்ளார்.

இதனைப் பார்த்து கோபமடைந்த தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ, அந்த ஊசியை வாங்கி மாணவிக்குப் போட்டுள்ளார். இதனால், மாணவி தீனா மேரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. 

மாணவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, தீனா மேரியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து, போலீசார் தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோவை விசாரித்து வருகின்றனர்.