காஞ்சிபுரம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர் பேரவையின் கூட்டமைப்புகளின் சார்பில் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

காஞ்சிபுரம் மாவட்டம். வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூக நீதி பாதுகாப்புக்கான மாணவர் பேரவையின் கூட்டமைப்புகள்  நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் அபுசாலி தலைமை தாங்கினார். இதில், பல்வேறு கட்சிகளின் மாணவர் பேரவை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், "நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசைக் கண்டிப்பது, 

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவது" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டு முழக்கங்களும் எழுப்பப்பட்டன. 

இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், முஸ்லிம் அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் மாணவர் பேரவையினர் பங்கேற்றனர்.