Struggle to continue on 164th day Continue until idorobarbone is canceled ...
புதுக்கோட்டை
நெடுவாசலில் ஐட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி 164-வது நாளாக நேற்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் ஐட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து ஏப்ரல் 12-ஆம் தேதி முதல் அப்பகுதி மக்கள் தங்களது இரண்டாம் கட்ட போராட்டத்தைத் தொடங்கினர்.
அதனைத் தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு கவன ஈர்ப்புப் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இவர்களுக்கு ஆதரவு தெரித்து அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள், மக்கள், மாணவர்கள் என அனைவரும் தமிழக அரசுக்கு எதிரான கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
நெடுவாசல் நாடியம்மன் கோயில் அருகே நேற்று நடத்தியப் போராட்டத்தில், ஐட்ரோகார்பன் திட்டத்தை ரத்துச் செய்ய வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
150 நாள்களைக் கடந்தும் இதுவரை இவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை மத்திய அரசோ, மாநில அரசோ எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
