Asianet News TamilAsianet News Tamil

வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் புயல்...! வானிலை மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

Storm in 24 hours in the Bengal Sea...metrological centre
Author
Chennai, First Published Oct 9, 2018, 5:38 PM IST

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். லூபன் புயல், மத்திய மேற்கு அரபிக்கடலில் பகுதியில் தற்போது, ஓமனுக்கு தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. மேலும் அடுத்து வரும் 24 மணி நேரத்தல் வலுப்பெற்று ஏமன் மற்றும் ஓமன் கடற்கரையை நோக்கி நகர்ந்து செல்லும். Storm in 24 hours in the Bengal Sea...metrological centre

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. ஒடிசாவுக்கு தென்கிழக்கே சுமார் 560 கி.மி. இது நிலை கொண்டுள்ளது. இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்ந்து செல்லும்.Storm in 24 hours in the Bengal Sea...metrological centre

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 13 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக்கடல் பகுதியில் மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. Storm in 24 hours in the Bengal Sea...metrological centre

மத்திய வங்க கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இதையடுத்து பலத்த காற்று வீசக்கூடும். இது படிப்படியாக அதிகரித்து நாளை மற்றும் மறுநாள் 80 மற்றும் 90 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios