Stern action of the state government on8 way highway
8 வழி பசுமை சாலை திட்டத்தை நடைமுறைபடுத்த யார் எதிர்த்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் எச்.ராஜா நேரில் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் - சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக சேலம், தருமபுரி, கிரிஷ்ணகிரி பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் இருவரும் சந்திக்கும் போட்டோவை பதிவேற்றியுள்ள எச் ராஜா, கோவில் விவகாரங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது மற்றும் 8 வழிச்சாலை தொடர்பாக மாநில அரசின் கடுமையான நடவடிக்கை குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ளார்.
