சிலை கடத்தல் வழக்கில் தொடா்புடைய மேலும் 4 பேரை சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸார் இன்று சிவகங்கையில் கைது செய்தனா்.

சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள பழமையான கோயில்களில் இருந்து சுவாமி சிலைகளை திருடி வெளிநாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்த தீனதயாளன் என்ற லட்சுமி நரசிம்மன் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து, அவா்களிடம் இருந்து ஏராளமான சுவாமி சிலைகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கோயில்களில் இருந்து சுவாமி சிலைகளை திருடி விற்பனை செய்த குற்றத்தில் காரைக்குடி பகுதியை சோ்ந்த கணகராஜ், தினகரன், பெரியநாயகம் மற்றும் செல்வாராஜ் ஆகிய 4 பேர் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு டிஎஸ்பி சுந்தரம் தலைமையில் தனிப்படை போலீஸார் சிவகங்கை மாவட்டத்தில் முகாமிட்டிருந்தனர்.

இந்தநிலையில், இன்று சிவகங்கையில் இவா்கள் நான்கு பேரையும் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் சென்னைக்கு அழைத்து சென்றனா்.