State-level skating tournaments starting from September 30th ...
பெரம்பலூர்
பெரம்பலூரில் ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தில் மாநில அளவிலான ஸ்கேட்டிங் தேர்வு போட்டிகள் செப்டம்பர் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில், இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் நடத்தும் மாநில அளவிலான ஸ்கேட்டிங் தேர்வுப் போட்டிகள் நடைபெறுகிறது.
இத்தேர்வுப் போட்டிகளில் 11, 14, 17, 19 வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அவர்களது வயது மற்றும் பிரிவு வாரியாக தனித்தனியே நடத்தப்பட உள்ளது.
இதில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கான சாலையோர தேர்வுப் போட்டிகள் அக்டோபர் 1-ஆம் தேதி காலை 6 மணி அளவில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே நடைபெறுகிறது.
ஒவ்வொரு பிரிவிலும் 6 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்பட்ட 48 மாணவ, மாணவிகள் 9.12.2017 முதல் 12.12.2017 வரை கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்காம் என்ற இடத்தில் நடைபெறும் தேசியப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்
