Starting from the survey of birds in 25 watersheds in Coimbatore
கோயம்புத்தூர்
கோயம்புத்தூரில் உள்ள 25 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது. வனத் துறை மற்றும் தன்னார்வ அமைப்புகள் 15 குழுக்களாகப் பிரிந்து இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் கோட்ட வனத் துறை மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் நீர்நிலைகளில் உள்ள பறவைகள் கணக்கெடுக்கும் பணி பிப்ரவரி 7, 8-ஆம் தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி உக்கடம், பெரியகுளம், சிங்காநல்லூர், நரசம்பதி, முத்தண்ணன் குளம், பேரூர் பெரியகுளம், சொட்டயாண்டி குட்டை, குனியமுத்தூர் செங்குளம், குறிச்சி குளம், சூலூர், வாளையாறு அணை உள்ளிட்ட 25 நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது.
இதில், வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் 15 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு கணக்கெடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து வனத் துறையினர், "கோவையில் உள்ள குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட 29 நீர் நிலைகளில் 1950-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 238 பறவை இனங்கள் உள்ளதாகப் பதிவாகி உள்ளது.
இதில் சில வெளி நாட்டுப் பறவைகளும் இருந்துள்ளன. நிகழாண்டுக்கான கணக்கெடுப்பில் எத்தனை நீர் நிலைப் பறவை இனங்கள் உள்ளன? என்பது முடிவில்தான் தெரியவரும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.
