started northeast rain within 48 hours

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வட கிழக்கு பருவ மழை தொடாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் ஒட்டி உள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

அதே வேளையில் சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஸ்ரீவைகுண்டத்தில் 5 செமீ மழையும்,சேரன்மாதேவியில் 4 செமீ மழையும் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது