உருவானது சின்ன “சின்னமா பேரவை “.....இளவரசிக்கும் பெருகுது ஆதரவு கூட்டம் .....!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இருக்கும் போதே, அவருடைய தோழியான சசிகலாவிற்கு ஆங்காங்கு “ சசிகலா பேரவை “ என தொடங்கப்பட்டது .

இருந்தாலும், அம்மா அவர்கள் “ தான் மட்டும் தான் அதிமுக விற்கு தலைவி என்பதில் திட்டவட்டமாக இருந்தார். சசிகலாவை பொறுத்தவரை , அவரை கட்சியில் இருந்து, சற்று தள்ளியே வைத்திருந்தார் என்ற உண்மை அனைவருக்குமே கண்கூடாக தெரியும்.

இந்நிலையில், அம்மா அவர்கள் மறைந்ததால், அவருடைய இடத்தை பிடிக்க முழுமுயற்சியில் சசிகலா ஈடுபட்டுள்ளார் ....

இந்நிலையில், ஆங்காங்கு பரவலாக , பேனர்கள் மற்றும் செய்தித்தாள்கள் என அனைத்து பக்கங்களிலும் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் அதிமுக தொண்டர்கள்......

இதன் தொடர்ச்சியா, சசிகலாவிற்கு “ சின்னம்மா பேரவை “ இருப்பது போன்றே, இவருடைய அண்ணியான , இளவரசிக்கு சின்ன “ சின்னம்மா பேரவை “ என , இவருடைய பகுதியான தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

என்னதான் அண்ணியாக இருந்தாலும், அரசியல்னு வந்துவிட்டால் “இதெல்லாம் சகஜமம்பா” என எடுத்துக்கொள்வாரா அல்லது அடுத்த கட்ட நகர்வுக்கு, இளவரசிக்கு வழி விடுவாரா சசிகாலா ..... என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்......