விதவிதமான ஓட்டல்கள்... வித்தியாசமான ஆப்ஷன்கள்... என பல்வேறு விதங்களில் ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. நம் வசதிக்கேற்பவும், நம் மனதுக்கு பிடித்தமான ஓட்டல்களைத் தேடி செல்கிறோம். நமக்கு பிடித்த ஓட்டல்களை தேடி செல்வதைவிட, நமக்கு பிடித்தாற்போன்று அறையை மாற்றி அமைக்கும் வகையில் சில ஓட்டல்கள் தற்போதுள்ளன. 

ஆனால் குறிப்பிட்ட இந்த ஓட்டல், கொஞ்சம் அல்ல... மிகவும் வித்தியாசமானதுதான். ஓட்டலுக்கு நாம் செல்லும்போது, பல்வேறு அறிவிப்பு போர்டுகளை பார்த்திருக்கிறோம். நோ ஸ்மோக்கிங் ஸோன், நோ ஸ்மோக்கிங் ரூம் என பல வகையான எச்சரிக்கை பலகைகள் இருப்பதை பார்த்திருக்கிறோம். அதற்கேற்றார்போலவே நாமும் நடந்து கொள்வோம். 

ஆனால், இந்த ஓட்டலிலே மிகவும் வித்தியாசமான எச்சரிக்கை பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அது எச்சரிக்கை போர்டா? அல்லது களேபரத்தை ஏற்படுத்தும் போர்டா? என்பதை நீங்களே பாருங்க... அந்த ஓட்டலில் சில அறைகளில், நோ செக்ஸ் அலவ்டு ரூம் என்று போர்டு வைத்துள்ளனர். இந்த அறிவிப்பு பலகைதான், வாடிக்கையாளர்களை மிகவும் கலவரப்படுத்தியுள்ளது. ஆனால் இதனை நம்பித்தான் ஆக வேண்டும்.

 

இது தொடர்பாக ரோபனேட்டர் என்ற பெயரில் ஒருவர் ரெட்டிட் இணையதளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். குறிப்பிட்ட எண் கொண்ட ரூமை புக் செய்து சென்றபோது, நோ செக்ஸ் போர்டைப் பார்த்து வெகுவாக குழம்பித்தான் போனாராம். இங்கு செக்ஸ் கிடையாது... எந்த வகையான உடலுறவும் மேற்கொள்ளக் கூடாது... ஜாலியாக கட்டி மட்டும் பிடிச்சுக்கலாம் என்று போட்டுள்ளதாம். எது எப்படியோ, இந்த ஓட்டலுக்கு போறதும்... போகாததும் நீங்கதான் முடிவு செய்யணும். என்ன முடிவு பண்ணிட்டீங்களா?