ஜெயலலிதா மரணம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்…மு.க.ஸ்டாலின் மீண்டும் அதிரடி..
சென்னை கொளத்துர் தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது தமிழகத்தில் தண்ணீர் இன்றி பயிர்கள் வாடுவதை பொறுக்க முடியாமல் ஒரே நாளில் மட்டும் 9 பேர் உயிரிந்துள்ளதாக தெரிவித்தார்.
விவசாயிகள் தொடர்ந்து மரணமடைவது குறித்து தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள சந்தேகத்தை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், இது குறித்து முதலமைச்சர் ஓபிஎஸ் விளக்கம் அளிக்க வேண்டும் என அதிரடியாக தெரிவித்தார்.
