Stanie speech about hindi
திமுக இந்தியை எதிர்க்கிறது என்பது பொய்யான குற்றச்சாட்டு என்றும் கட்டாய இந்தித் திணிப்பையே நாங்கள் எதிர்க்கிறோம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மாதம் 28-ந்தேதி நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், இந்தித் திணிப்பை கண்டித்தும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரியும் மாவட்ட வாரியாக கருத்தரங்கு நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி வேலூர் அனுகுலாஸ் கன்வென்ஷன் சென்டரில் இந்த கருத்தரங்கை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் இந்தியை நாங்கள் எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். அனைத்து வகையிலும் இந்தியை மத்திய அரசு திணித்து வருகிறது. மத்திய அரசு ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்றபெயரில் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு பல்கலைகழகங்களில்இந்தியை கட்டாயமாக்க முயற்சிக்கிறது. செல்போன் குறுஞ்செய்தி மற்றும் ஏடிஎம் சிலிப்புகளில் இந்தியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது என இந்தித் திணிப்பு எவ்வாரறு செயல்படுத்தப்படுகிறது என்பதை பட்டியலிட்டார்
திமுக ஆட்சி காலத்தில் தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்தது. உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
