SRM College student suicide
காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரியை அடுத்துள்ள பொத்தேரியில் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் பயிலும் மாணவன் ஒருவன் இன்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரா மாநிலாவைச் சேர்ந்த மாணவன் மாஜஸ்டி சாய் நிக்கன். இவர் பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். கல்லூரியில் பி.டெக் 4 ஆம் ஆண்டு பயின்று வந்தார்.
இந்த நிலையில் திடீரென நிக்கன், கல்லூரி விடுதியின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். நிக்கன் தற்கொலை செய்து கொண்டது விடுதி நிர்வாகம், போலீசாருக்கு தகவல் அளித்தது.
பின்னர் அங்கு வந்த போலீசார், நிக்கனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் தற்கொலை செய்து கொண்டது குறித்து, ஆந்திராவில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவனின் தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
