Sridevi said greeted Kamal

நடிகர் கமல் ஹாசனின் புதிய முயற்சிகள் என்னவாக இருந்தாலும், அதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக நடிகை ஸ்ரீதேவி கூறியுள்ளார்.

நடிகர் கமல் ஹாசனின் 63-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, தியாகராய நகரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தான் அரசியலுக்கு வருவது குறித்து பேசிய கமல், அதற்கு முன்னோட்டமாக மையம் விசில் என்ற செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.

அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னேற்பாடுகளைத் தீவிரமாக செய்து கொண்டிருப்பதாகவும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்து தரப்பு மக்களைப் பற்றி தெரிந்துகொள்ள முடிவு செய்திருப்பதாகவும் கூறினார். 

இந்த நிலையில், கமலின் அனைத்து புதிய முயற்சிகளுக்கும் வாழ்த்து தெரிவித்துவித்து கொள்வதாக நடிகை ஸ்ரீதேவி கூறியுள்ளார். மேலும் பேசிய ஸ்ரீதேவி, நடிகர் கமல் அற்புதமான நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். அவரது புதிய முயற்சிகள் என்னவாக இருப்பினும் அதற்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். 

கமல் ஹாசன் சொல்லும் வரை அவருடன் 24 படங்களில் நடித்திருக்கிறேன் என்பதை தான் உணரவில்லை என்றும், அவருடன் பணிபுரிந்தது சிறப்பாக இருந்ததாகவும் ஸ்ரீதேவி கூறியுள்ளார்.