ஸ்ரீ தேவி வாங்கி தந்த  சீட்...! யாருக்கு தெரியுமா...?

மறைந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஸ்ரீ தேவி, படத்தில் மட்டுமில்லை அரசியலிலும்  விஷயம் தெரிந்தவர்.

அப்போதைக்கு காங்கிரஸ் தலைவராக இருந்த ராஜீவ் காந்தி,ஸ்ரீ தேவி யின் தந்தை  ஐயப்பனுக்கு வாய்ப்பு தந்தார்.ஆனால் அவர் வெற்றி பெற வில்லை.

பின்னர் 1991  ஆம் ஆண்டு,நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் வந்த போது, தனது சகோதரி லதாவின் கணவர் சஞ்சய் ராமசாமிக்கு சீட் வாங்க விரும்பி,இவர்கள் இருவரையும் டெல்லிக்கு  அழைத்து சென்று  ராஜிவை சந்தித்தார் ஸ்ரீ தேவி  

அன்றைய தினத்தில் தமிழகத்தில்....

அப்போது தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் கூட்டம் சேர்மன் நரசிம்மராவ் தலைமையில் நடந்தது.அப்போது விருதுநகர் தொகுதிக்கான வேட்பாளரை நரசிம்ம ராவ்  அறிவிக்க இருந்த தருணத்தில், ராஜீவ் சஞ்சய் ராமசாமி  என்று சொல்ல திடீர் அலை எழுந்தது...

அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்த,வாழப்பாடி அவர்களை கூட்டத்தில் இருந்த  மூப்பனார் சமாதானம் செய்து வைத்தார்.

ஒரு வழியாக சஞ்சய் ராமசாமிக்கு சீட் கொடுத்தவுடன், வீட்டிற்கு சென்ற ராஜீவ் தனது செயலாளர் மூலம் ஸ்ரீ தேவிக்கு தகவல் சொல்லவே, விடியற்காலை முதல் வேலையாக  தனி விமானம்  பிடித்து டெல்லி சென்ற ஸ்ரீ தேவி,ராஜிவை சந்தித்து  மரியாதை செலுத்தி நன்றி கூறி  உள்ளார்.

குறிப்பு : உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த  ராமசாமியின் மகன் தான் சஞ்சய் ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது