Sri Lankan fishermen held talks with India on April 7

இந்தியா இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.

கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் படகுகளை பறிமுதல் செய்வதும், தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதும், பின்னர் மீனவர்கள் விடுவிக்க படுவதும் வாடிக்கையாக உள்ளது.

இதற்கான நிரந்தர முடிவு இன்னும் தீர்க்கப்படாத நிலையே தொடர்கிறது.

இதனிடையே சில தினங்களுக்கு முன்பு தமிழக மீனவர் சங்கத்தினர் டெல்லி சென்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக இந்தியா இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த பேச்சுவார்த்தை இலங்கை தலைநகர் கொழும்புவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் 143 படகுகள் விடுவிக்கபடாமல் இருக்கும் நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இதில், தமிழகத்தின் அளவு என்ன?, இலங்கையின் அளவு என்ன? ஏன் துப்பாக்கி சூடு, சிறைபிடிப்பு, என்னென்ன பிரச்சனைகள் என்பது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.