Sri Lanka sanctioned to release 42 fishermen

இலங்கை அரசால் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 42 பேர் நாளை அல்லது நாளை மறுநாள் விடுவிப்பதற்கான உத்தரவு வெளியாகும் என தகவல் தெரிவிக்கிறது.

கடல் எல்லையை மீறுவதாக கூறி தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களை விடுவிப்பதற்காக இந்திய வெளியுறவுத் துறை, இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்தது.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கு தமிழக மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாளையோ அல்லது நாளை மாலையோ அவர்கள் விடுவிக்கப்படலாம் என்றும், இது தொடர்பான உத்தரவை நாளை மாலை வெளியாகும் என்று கூறப்படுகிறது.