Asianet News TamilAsianet News Tamil

விவிஐபி களுக்கு மாணவிகளை விருந்தாக்க முயன்ற மாமிகள்... மார்க் குறைத்து மறுகூட்டலில் கோடிகளை அள்ளிய கேடிகள்!

special write up about nirmaladevi uma punitha and kavitha
special write up about nirmaladevi uma punitha and kavitha
Author
First Published Aug 4, 2018, 2:28 PM IST


மார்க் குறைத்து மறுக்கூட்டலில் பல கோடிகளை சுருட்டிய கேடி! மாணவிகளை கட்டிலுக்கு விருந்தாக்க முயன்ற மாமிகள்! மாணவர்களின் வாழ்கையில் தாறுமாறாய் விளையாடிய கேடிகளைப் பற்றிய ஒரு அலசல்

"மாணவிகளை விவிஐபி களின் விருந்தாக்கி வந்த மாமி நிம்மி"

கடந்த ஏப்ரல் மாதம் தமிழக ஆளுநர் மாளிகையை ஆட்டம் காண பெண்ணாள் தமிழகமே அதிர்ந்தது, மாதா, பிதா, குரு தெய்வம் என சொல்வார்கள், தெய்வத்திற்கும் மேலான ஒரு இடத்தில் இருந்த நிர்மலா தேவி என்ற பேராசிரியை தன்னிடம் படிக்கும் மாணவிகளை சில பெரிய மனிதர்களின் கட்டிலுக்கு விருந்தளிக்க அவர்களை மூளைச்சலவை செய்த ஆடியோ வெளியாகி தமிழக மக்களின் கோபத்திற்கு உள்ளானார்.

கடந்த மார்ச் 14ம் தேதி 4 கல்லூரி மாணவிகளை சில பெரிய மனிதர்களுக்கு பாலியல் ரீதியாக படுக்கைக்கு அனுப்ப வற்புறுத்தி தொலைபேசியில் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய உரையாடல் வாட்ஸ் அப்பில் வெளியானதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திடம் 4 மாணவிகள் புகார் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் நிர்மலா தேவியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது.  மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில்நேற்று பேராசிரியை நிர்மலா கைது செய்யப்பட்டார். 19நிமிட உரையாடலை நொடிக்கு நொடி அலசல்...
நேற்று கைது செய்யப்பட்டதிலிருந்து விடிய விடிய நடந்த விசாரணையில் முதலில் நிர்மலாதேவி மாணவிகளிடம் பேசிய ஆடியோவை நொடிக்கு நொடி தவாராமல்கேட்டனர்.

நிர்மலாதேவியிடம், அவர் பேசிய ஆடியோவிளிருந்தே கேள்விகளை துருவித் துருவி கேட்டுள்ளனர். மாணவிகளிடம் பேசும்போது, 110 பேர் அங்கு செயல்படுகிறார்கள், என்னைப்போல் 400 பேர் இதற்காக செயல்படுகிறார்கள், ஆளுநர் மீட்டிங்கில் நான் அருகில் சென்று வீடியோ பிடிக்கும் அளவுக்கு எனக்கு செல்வாக்கு இருக்கிறது உங்களுக்கு தெரியும் என தனக்கு எவ்வளவு கெத்து இருக்கிறது என்று பேசியிருந்தார்.

மேற்படிப்பு படிக்க ஆசையில்லை அரசுத் துறையில் தேர்வு எழுதப்போகிறோம் என்று மாணவிகள் தட்டிக்கழித்தாலும், உங்களுக்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்து தருகிறேன், இந்த டிஎன்பிஎஸ்சி எல்லாம் எனக்கு சாதாரணம். ஐஏஎஸ், ஐபிஎஸ் படிக்கவும் ஏற்பாடு செய்து தருகிறேன். பணம் உங்க அக்கவுண்டுக்கு வரும் என தனது செல்வாக்கை மாணவிகளிடம் விவரிக்கிறார். அப்படியென்றால் இது எவ்வளவு பெரிய நெட்வொர்க்? கல்வித்துறையில் இருக்கும் ஒட்டுமொத்த பெரிய மனிதர்களுக்கு இப்படி பெண்களை கட்டிலுக்கு அனுப்புகிறாரா? என கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டது.

நொடிக்கு நொடி நீங்கள் அட்ஜெஸ்ட் செய்தால் போதும் நான் பார்த்துகொள்கிறேன் என சொன்னாலும், அந்த மாணவி  இல்ல மேம்.. இது எங்களுக்கு செட் ஆகாது மேம்.. இஷ்டம் இல்ல மேம் என ஒத்துக்கொள்ளவில்லை என்றவுடன், தனக்கு பெரிய லெவலில் தொடர்பு உள்ளது, உங்களுடைய எதிர்காலம் சொர்க்கமாக இருக்கும் என்றும், நான் சொல்லும் விஐபி பேரைக்கேட்டால் அப்புறம் நீங்களே தானே வந்துவிடுவீர்கள் நாக்கு கூசாமல் இப்படி பேசியிருக்கிறார்.

ஒரு பல்கலைகழகத்தில் பணியாற்றும் பேராசிரியை, மாணவிகளை இப்படி தில்லாக தனக்குப் பின்னால் பெரிய பெரிய விவிஐபிகள் இருக்கிறார்கள் என தெனாவட்டாக படிக்கும் பெண்களை படுக்கைக்கு தள்ள முயற்சிப்பதைப் பார்த்தால் நிர்மலா தேவி வெறும் அம்புதான். இவருக்குப் திரை மறைவில் மிகப்பெரிய நெட் ஒர்க் வேலை செய்ததை அவரே அதை ஆடியோவில் பேசியிருந்தார்.

ஆளுநர் லெவலில் தெரியும் – இப்படி ஒரு பெண் மாணவிகளிடம் சொல்கிறார் என்றால் ஒரு பெரும் கிரிமினல் வலைப்பின்னலாகத் தெரிகிறது. பேராசிரியை ஒருவர், பாலியல் தரகர் நிலைக்கு இறங்கி, மாணவிகளுக்குப் பாலியல் வலை வீசியிருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். இது அவர் ஒருவர் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயமாகத் தோன்றவில்லை. ஆளுநர், அவரது அலுவலகம் மற்றும் தமிழக உயர் கல்வித் துறை பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் இதில் தொடர்பு இருக்கக்கூடும் என்ற வலுவான சந்தேகம் எழுந்தது.

அதே சமயத்தில், நிர்மலா தேவி ஒரு கருவியாகச் செயல்பட்டிருக்கிறார். அவரைப் பின்னணியில் இயக்கியவர்கள் உயர் அரசியல் மற்றும் அதிகார செல்வாக்கு உள்ளவர்களாக இருப்பதாகவே தெரிகிறது.தற்போது இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதால் அந்த விஐபிக்கள் யார் யார் இந்த நெட்வொர்க்கில் இருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகுமா?  இதுவரை விடை தெரியாத கேள்வியாகவே இருந்து வருகிறது.

"ஹாஸ்டல் ஓனருக்கு பர்த்டே கிப்ட் மாணவிகளை  கொடுக்க முயன்ற விஸ்வாசி லேடி வார்டன்"

இதனயடுத்ததாக, கோவை பீளமேடு பாலரங்கநாதபுரம் பகுதியில் தனியார் மகளிர் விடுதியொன்றை ஜெகநாதன் என்பவர் நடத்திவந்தார். இதில், புனிதா என்பவர் வார்டனாக பணியாற்றினார். வேலைக்குச் செல்லும் பெண்களும் கல்லூரி மாணவிகளும் இங்கு தங்கியிருந்தனர். சில நாட்களுக்கு முன்பு, தனக்குப் பிறந்தநாள் என்று கூறி விடுதியில் இருந்த மாணவிகள் சிலரை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார் புனிதா. அங்கு, அவர்களை மது அருந்துமாறு வற்புறுத்தினார். அதன் பின், விடுதி உரிமையாளர் ஜெகநாதனுக்கு வீடியோ கால் செய்த புனிதா, சில மாணவிகளை அவரிடம் பேசுமாறு கட்டாயப்படுத்தினார். அவர் தங்களைத் தவறான பாதைக்கு அழைத்ததாக, அந்த மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் கூறினர்.

இந்த விவகாரம் குறித்து, போலீசில் புகார் செய்தனர் சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர். இதன் பேரில் விடுதி உரிமையாளர் ஜெகநாதன், புனிதா ஆகியோரை போலீசார் தேடிவந்தனர். கடந்த வாரம் விடுதி உரிமையாளர் ஜெகநாதன் சடலம் திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் பகுதியிலுள்ள ஒரு கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார் புனிதா. இவரை ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. சிறையில் அடைக்கப்பட்ட புனிதாவை விசாரணை  நடத்தி வருகிறார்கள்.

"மார்க் குறைத்து மறுக்கூட்டல் என்ற பெயரில் மானாவாரியா சுருட்டிய கேடிகள்"

இந்த விஷயம் அடங்கி முடிவதற்குள்,  அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் வாங்கியவர்களை சந்தேகத்துடன் பார்க்க வைத்துள்ளார் முன்னாள் தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளரும் பேராசிரியையுமான உமா, மறுகூட்டல் என்ற பெயரில் சுமார் பத்து பேராசிரியர்கள் கூட்டாக 600 கோடி ரூபாய் வரை சுருட்டியிருப்பது அம்பலமாகியுள்ளது. இந்த மாணவர்களிடம் கொள்ளையடித்த இந்த கேங்கிற்கு தலைவியாக விளங்கிய இந்த பேராசிரியை உமா, 2015 முதல் 2018 தொடக்கம் வரை அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்தவர். இவர் அந்தப் பொறுப்பில் இருக்கும்போது நடந்த ஊழல்தான் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அப்படி என்ன நடந்தது... எப்படி நடந்தது? அண்ணா பல்கலைக்கழக ஊழியர்களிடமிருந்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

'தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் என்பவர்தான் ஒரு பல்கலைக்கழகத்தில் மிக முக்கியமானவர்.  அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகளில் நடக்கும் தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணியை எந்தப் பேராசிரியர் செய்ய வேண்டும் என்ற முடிவெடுக்கும் அதிகாரம் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலருக்குத்தான்  உள்ளது. அந்தப் பொறுப்புக்கு வந்த உமா, ஒவ்வொரு செமஸ்டர் தேர்வு விடைத்தாளையும் யார் திருத்த வேண்டும் எனக் கொடுத்த பட்டியலில் இருக்கும் பேராசிரியர்களே வேல்யுவேஷனுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

2016ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு செமஸ்டரிலும் தேர்ச்சி சதவிகிதம் குறைந்தது. அதாவது குறைய வைக்கப்பட்டது. மதிப்பெண்கள் குறைவாகப் போட்டு மாணவர்கள் பெயில் ஆக்கப்பட்டனர்.'நான் நல்லாதானே எழுதினேன்... எப்படி பெயில் ஆனேன்' என்று ரீ வேல்யூவேன்ஷனுக்கு அதாவது மறு கூட்டலுக்கு வரும் மாணவர்கள்தான் உமாவின் டார்கெட். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போதே, பல்கலைக்கழகத்தில் உள்ள சிலர் மூலமாக பேரம் தொடங்கும். 'ஒரு பேப்பருக்கு 10 ஆயிரம் ரூபாய்... எவ்வளவு மார்க் வேணும்?' எனக் கேட்பார்கள். மாணவர்கள் பலரும் இதற்குச் சம்மதித்தபடி பேப்பருக்கு 10 ஆயிரம் கொடுப்பார்கள். இப்படி ஒருவர் அல்ல, இருவர் அல்ல... லட்சக்கணக்கான மாணவர்களிடம் வசூல் நடந்திருக்கிறது.

அதாவது 600 கோடி வரை இதில் மோசடி நடந்திருக்கிறது என்றால் எவ்வளவு பேரிடம் வசூல் நடந்திருக்கும்?  இப்படித்தான் கடந்த 3 வருடங்களாக மாணவர்கள் பெயில் ஆக்கி, மறுகூட்டல் செய்யது பாஸ் போட பல கோடிகணக்கில் சுருட்டியுள்ளார். அதுமட்டுமல்ல ,  மார்க் கம்மியா போட்டு மறுகூட்டலுக்கு அப்ளிகேஷன் போட வைத்து  1000 கணக்கான மாணவர்களுக்கு மார்க் அள்ளி அள்ளி போட்ட கொடுமையும்  நடந்துள்ளதாம்.

இதுல கொடும என்னன்னா? பேப்பர் திருத்தும் பணிக்கு வரும்போதே மாணவர்களின் மார்க் குறைத்து, ' பாதிக்கு பாதி பெயில் ஆக்கிடுங்க' என்று உமாவிடமிருந்து வரும்  உத்தரவு.   மறுகூட்டலுக்கு வரும் மாணவர்களுக்கு காசுக்கு தகுந்த மாதிரி மார்க் போட  வேண்டும் என ஒரு லிஸ்ட்டும் வருமாம். இப்படி மாணவர்களிடம் ஆட்டையைப் போட்ட பணத்தில் 60 சதவீதம் உமாவுக்கு வந்துள்ளதாம். மீதி 40 சதவீதம் பணம் உமாவின் கேங்கில் சிக்கியிருக்கும் அந்த 9 பேர் ஷேர் போட்டுக் கொண்டார்களாம்.

"அறநிலையத்துறையை ஆட்டிப்படைத்த அம்மணி" 

சிலை செய்ததில் மோசடியில் ஈடுபட்டதாக அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதா, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது அறநிலையத்துறை  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மட்டும் சுமார் 36,000-த்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களில் சிறிய மண்டபம் கட்டுவது முதல் கோயில் கும்பாபிஷேகத்துக்குத் திருப்பணி செய்வது வரை எந்தவகை திருப்பணியாக இருந்தாலும் சென்னையில் உள்ள அறநிலையத்துறை அலுவலகம் அனுமதி கொடுத்த பிறகுதான் செய்ய முடியும். இந்த மிகப்பெரிய பொறுப்புக்குக் கூடுதல் ஆணையரை நியமித்து திருப்பணிகளைக் கவனித்து வந்தது அறநிலையத்துறை. திருப்பணிப் பிரிவின் கூடுதல் ஆணையராகப் பதவி வகித்து வந்தவர்தான் இந்த கவிதா. சிலை மோசடி வழக்கில் அவர்  சில நாட்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.

2015-ல், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் ‘சோமாஸ் கந்தர்’ சிலை பழுதடைந்ததால், 50 கிலோ எடையில், ரூ.2.12 கோடி செலவில் புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டு, 2016-ம் ஆண்டு டிசம்பரில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த சிலையில் அறநிலையத்துறை  5 சதவிகித தங்கம்கூட கலக்கப்படவில்லை என்று பக்தர்கள்  பகிரங்கமாக குற்றம் சாட்டினார்கள். உபயம் செய்த  தங்கத்திலும் கோயில் அதிகாரிகள்  கிலோ கணக்கில்  அமுக்கியது அம்பலமானது. இதையடுத்து, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் அண்ணாமலை என்ற பக்தர் தொடர்ந்த வழக்கின் விசாரணை செய்து அறிக்கை கொடுக்குமாறு, காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, இந்த வழக்கானது சிலைகடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் விசாரணை நடைபெற்றது. 

இந்த வழக்கின் விசாரணையின்போது, இக்கோயில் அலுவலர்கள் இந்தச் சிலை செய்வதற்கு 5 லட்சம் ரூபாய் பணம் கவிதாவிடம் கொடுத்திருப்பதாகக் கோயில் அர்ச்சகர் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பாக கவிதாவை அவருடைய இல்லத்தில் கைது வைத்து கைது செய்துள்ளனர்.  

இந்த கைதைத் தொடர்ந்து, கவிதா மீது, சில புகார்கள் இருப்பதும்  வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. காஞ்சிபுரம் இரட்டைத் திருமாளிகை சிதிலமடைந்தது, அதைச் சீரமைக்க, 79.90 லட்சம் ரூபாயை அறநிலையத்துறை ஒதுக்கியது.  மாளிகையின் கீழ்ப் பகுதியைச் சீரமைக்க 65 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டதை அப்படியே அமுக்கியது என பல புகார்கள் உள்ளதாம்

மேலும், திருத்தணி கோயில் தங்க விமானம் செய்யும் திருப்பணியிலும் தங்கத்தில் முறைகேடு செய்திருப்பதாகவும், தங்கக் கோபுர ஒப்பந்தக்காரருடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாகவும் அதற்கான வழக்கு விஜிலென்ஸ் விசாரித்து வருவதும்  என வேற லெவலில் கேஸ் நடக்கிறதாம்.

விப்படி விஷயம் இருக்க, கவிதாவின் கூடவே இருக்கும் சில அல்லக்கைகள் ''கவிதாவை கைது செய்தது பொன்.மாணிக்கவேலின் திட்டமிட்ட சதி. சமூகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரை வேண்டும் என்றே இதுபோன்ற வழக்குகளில் மாட்டிவிட்டிருக்கிறார்கள். இதுவரை எந்தவித நேரடிக் குற்றச்சாட்டுகளும் இவர் மீது இல்லாத நிலையில், இவரைக் கைது செய்திருப்பதிலேயே இது பழிவாங்கும் நடவடிக்கை என்று தெரிகிறது என சொல்கிறார்கள். பக்தர்கள் கடவுளுக்கு காணிக்கை செலுத்திய தங்கத்தை ஆட்டையை போட்டுவந்த இந்த கவிதாவை பழிவாங்க பொன்.மாணிக்கவேலுக்கு அப்படியென்ன பழிதீர்க்கும் அளவிற்கு ஜன்மைப் பகை இருக்கப்போகிறது?  கறைபடாத கைகளுக்குச் சொந்தக்காரர் என தனக்கான ஒரு இமேஜை உருவாக்கிவந்த அறநிலையத்துறை கவிதாவை பாராட்டி வந்த நிலையில், இவரது கைது நடவடிக்கை மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios