Asianet News TamilAsianet News Tamil

4 மாவட்டங்கள்.. மீட்பு பணிகள் மேற்கொள்ள சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் - முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரிக்கு மீட்பு பணிகள் மேற்கொள்ள சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Special IAS officers have been appointed to carry out rescue operations in Nellai, Thoothukudi, Tenkasi and Kanyakumari-rag
Author
First Published Dec 17, 2023, 9:06 PM IST

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய வானிலை ஆய்வு மையம்‌ 17.42.2023 நாளிட்ட அறிவிக்கையில்‌, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும்‌ கண்ணியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில்‌ அதி கனமழை பெய்யக்கூடும்‌ என்று தெரிவித்துள்ளது.  அதி கனமழையினை எதிர்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களது அறிவுரையின்‌ பேறில்‌, பின்வரும்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ முன்னெச்சரிக்கை மற்றும்‌ நிவாரணப்‌ பணிகளை மேற்கொள்ள மாண்புமிகு அமைச்சர்‌ பெருமக்கள்‌ அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்‌. இன்று (17-12-2023) தமிழ்நாடு அரசின்‌ தலைமைச்‌ செயலாளர்‌ தலைமையில்‌ திருநெல்வேலி, தூத்துக்குடி தென்காசி மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள்‌ மற்றும்‌ பல்வேறு துறை உயர்‌ அலுவலர்களுடன்‌ காணொலி வாயிலாக ஆய்வுக்‌ கூட்டம்‌ நடத்தப்பட்டு, அதி கனமழையினை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள அறிவுரைகள்‌ வழங்கப்பட்டது.

Special IAS officers have been appointed to carry out rescue operations in Nellai, Thoothukudi, Tenkasi and Kanyakumari-rag

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌. மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காகவும்‌, பொதுமக்களைப்‌ பாதுகாப்பான இடங்களுக்குக்‌ கொண்டு செல்லவும்‌, உடன்‌ மீட்புப்‌ பணிகளைத்‌ துரிதப்படுத்தவும்‌, மழை நீர்‌ விரைவில்‌ வடிவதை உறுதி செய்யவும்‌, அனைத்துத்‌ துறைகளின்‌ செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காகவும்‌ பின்வரும்‌ மூத்த இந்திய ஆட்சிப்‌ பணி அலுவலர்கள்‌ கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்‌.

1.கன்னியாகுமரி - சு. நாகராஜன், நில நிர்வாக ஆணையர்.

2. திருநெல்வேலி - இரா. செல்வராஜ், அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை

3. தூத்துக்குடி - பா.ஜோதி நிர்மலா, அரசு செயலாளர், வணிகவரித் துறை

4. தென்காசி - சுன்சோங்கம் ஜதக் சிரு, அரசு செயலாளர், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை

உதவி எண்கள், மாநில அவசரகால செயல்பாட்டு மையம் 1070, வாட்ஸ் அப் எண். - 94458 69848, மாவட்ட அவரகால செயல்பாட்டு மையம் 1077 ஆகும்.

குறைந்த விலையில் தாய்லாந்தில் நியூ இயர் கொண்டாட ஆசையா..சூப்பரான ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios