வருகிற மே 1-ஆம் தேதி கரூர் மாவட்டம் முழுவதும் 157 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற இருக்கிறது என்று மாவட்ட ஆட்சியயர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், “கரூர் மாவட்டத்தில் வருகிற மே 1-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள 157 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

இந்தக் கூட்டத்தில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல்,

கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்,

கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம்,

கிராம ஊராட்சி நிர்வாகம்,

பொதுநிதி செலவினம் திட்ட அறிக்கை,

மகாத்மா தேசிய காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம்,

அம்மா உடற்பயிற்சி கூடம்” உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன” என்று குறிப்பிட்டு இருந்தார்.