இராமநாதபுரத்தில் பெய்துவரும் தொடர் மழையால் பத்து, மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் சிறப்பு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது.

முதுகுளத்தூர், கடலாடி, கமுதி பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

கடந்த வருடத்தில் பருவமழை பொய்த்துப் போனதால் தமிழகம் எங்கும் வறட்சி தலைவிரித்து ஆடியது. தண்ணீர் பஞ்சம், விவசாயிகள் தற்கொலை என பல்வேறு துயர சம்பவங்களும் நடந்தது.வறட்சியில் இப்பகுதியும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு இப்பகுதியில் மழை பெய்ததால், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் மேய்ச்சலுக்கு புல்வெளிகளும், கோடை விவசாயமான பருத்திக்கு போதுமான தண்ணீரும் கிடைத்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து பெய்த மழை காரணமாக, இப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மாலை நேர சிறப்பு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது.

தொடர்ந்து இரண்டு நாள்கள் பெய்த மழையால் விவசாயிகளும் மகிழ்ச்சி. மாலை நேர சிறப்பு வகுப்புகள் ரத்தானதால் மாணவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.