ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஒரு சில  அலுவலகங்களில் நேற்றே ஆயுத பூஜை செய்துவிட்டு தங்களது பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கி  கொண்டாடி உள்ளனர். சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை இவை இரண்டுமே ஆண்டிற்கு ஒரு முறை மிக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். 

சரஸ்வதி பூஜையன்று நம் வீட்டில் புத்தகம் மற்றும் நாம் பயன்படுத்தும் முக்கிய பொருட்களை வைத்து வணங்குவது ஆக சிறந்தது. இதே போன்று உழவர்கள் தாங்கள் பயன்படுத்தும் உழவு  பொருட்கள் முதல்  வானங்கள் என அனைத்திற்கும் பூஜை செய்து, வரும் ஆண்டும் இதே போன்று மிக சிறப்பாக இருக்க வேண்டும் என வணங்குவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது அரசு வாகனத்திற்கும் பூஜை செய்து, வாகனத்தின் முன்பாக இரு வாழைக் கன்றுகள் வைக்கப்பட்டு ஜக ஜோதியாக வரும் அற்புத காட்சியை நீங்களே பாருங்கள்...