ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே வேன் மீது, கண்டெய்னர் லாரி ஒன்று நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர பிரதேசம், சித்தூர் அருகே அனந்த்புரம் பகுதியில், இருந்து புதுச்சேரிக்கு ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சுற்றலா பயணிகள் 13 பேர் வேனில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

இந்த வேன், மதனப்பள்ளி, புங்கனூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த கண்டெய்னர் லாரி நேருக்குநேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.

இதில், சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 2 பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்தவர்கள், திருப்பதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை மோசமாக உள்ளதால், உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.